தெனியாய பச்சமரம் தோட்ட ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் திருட்டு
தெனியாய அணில்கந்த பச்சமரம் தோட்டத்திலுள்ள ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயம் உடைக்கப்பட்டு பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
ஆலயத்தின் மூலஸ்தானம் உடைக்கப்பட்டு விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருந்த ஆபரணமும், உண்டியலிலிருந்த காணிக்கையும் நேற்றிரவு திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபை தெரிவிக்கின்றது.
எனினும், இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப் போவதில்லை எனவும் ஆலய நிர்வாக சபை குறிப்பிடுகின்றது.
அண்மைக்காலமாக, தெனியாய பகுதியில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள், பணம் என்பன திருட்டப்பட்டமை தொடர்பில் செய்த முறைப்பாட்டிற்க்கு இதுவரை எவ்வித தீர்வுகளும் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாக சபை தெரிவிக்கின்றது.
தெனியாய அணில்கந்த தோட்ட மக்களின் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, தெனியாய பகுதியில் ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் குறித்து கிடைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை எந்த ஒரு சந்தேகநபரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இதேவேளை, தெனியாய பகுதியில் ஆலயங்களில் இடம்பெற்றுள்ள திருட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
தெனியாய பச்சமரம் தோட்ட ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் திருட்டு
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:


No comments:
Post a Comment