அரசுக்கு எதிரானவர்களுக்கு புலி முத்திரை குத்தும் கலாசாரமே தொடர்ந்து மேற்கொள்ளப்படுகன்றது; ரணில்
தனக்கெதிராக சேறு பூசும் சுவரொட்டிகள், புத்தகங்கள் அச்சிடவும் ‘பட்டலந்த’ படத்தைத் தயாரிக்கவும் அரசாங்கம் நூறு கோடி ரூபாவை செலவிட்ட போதும் இன்று அவை மூலையில் குவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு எதிரானவர்களுக்கு புலி முத்திரை குத்தும் கலாசாரத்தையே தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலை புலியென வர்ணித்து வந்தவர்கள் இன்று மைத்திரிபாலவையும் புலி முத்திரைக்குள் உள்வாங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்காக 27 வருடங்களை தியாகம் செய்த, 11 வருடங்கள் அக்கட்சியின் செயலாளராக பதவி வகித்த ஒருவர் எவ்வாறு திடீரென புலியாக மாறினார் எனவும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசுக்கு எதிரானவர்களுக்கு புலி முத்திரை குத்தும் கலாசாரமே தொடர்ந்து மேற்கொள்ளப்படுகன்றது; ரணில்
Reviewed by NEWMANNAR
on
December 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 06, 2014
Rating:


No comments:
Post a Comment