சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும்.
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மனித உரிமை கோட்பாடுகளை வலியுறுத்தி மன்னாரில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் எதிர்வரும் புதன் கிழமை 10 ஆம் திகதி மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ளதாக மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க் தெரிவித்தார்.
எதிர்வரும் புதன் கிழமை(10) சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மா
பெரும் பேரணியும்,பொதுக்கூட்டமும் மன்னார் பஸ் நிலையத்துக்கு அருகாமையில் காலை 9.30 மணிக்கு நடை பெறவுள்ளது.
மனித உரிமைகள்,பெண்கள் உரிமைகள்,சிறுவர் உரிமைகள்,பொருளாதார உரிமைகள்,கல்வி உரிமைகளுக்காக குரல் கொடுக்க முன்வரும் படி மன்னார் சமாதான அமைப்பு சகல அரச சார்பற்ற நிறுவனங்கள்,சிவில் சமூகங்கள்,பிரஜைகள் குழுக்கள்,மனிதஉரிமைக்காப்பாளர்கள்,அனைவரையும் பங்கு பற்றி மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி ஐ.நா சபை பிரகடனப்படுத்திய சர்வதேச மனித உரிமை பிரகடனம் மனித உரிமை சட்டங்கள் பற்றிய விளக்கங்களும் கொடுக்கப்படும் என மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ. அந்தோனிமார்க் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும்.
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:


No comments:
Post a Comment