அண்மைய செய்திகள்

recent
-

2014 மன்னார் பருவகால வர்த்தக சந்தைக்கு இலங்கை இளம் தொழில் முயற்சியாளர் ( YBSL ) மன்னார் கிளை ஆதரவு

2014 மன்னார் பருவகால வர்த்தக சந்தைக்கு இலங்கை இளம் தொழில் முயற்சியாளர் ( YBSL ) மன்னார் கிளைதனது ஆதரவை தெரிவித்துள்ளது.

இன்று 05.12.2014 திகதியிடப்பட்டு இது குறித்த கடிதம் ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக YBSL மன்னார் கிளை நிர்வாகசபைத் தலைவர் திரு.S.சதீஸ் தெரிவித்ததாவது. இலங்கையானது தனது பிரஜைகளுக்கிடையில் வர்த்தக சுதந்திரத்தை கொண்ட நாடாகும். அதனடிப்படையில் இலங்கைப் பிரஜை ஒருவர் உரிய சட்ட அனுமதிகளோடு தனது வர்த்தகத்தை எங்கும் முன்னெடுக்க முடியும். பருவகால வர்தக சந்தை என்பது நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற ஒன்றாகும். உண்மையில் பொருளாதார இக்கட்டில் வாழும் மக்கள் ஆண்டில் ஒரு குறித்த காலத்தில் இடம்பெறும் இவ் அரிய வாய்ப்பின் மூலம் தமக்குத் தேவையான பொருட்களை மலிவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பவற்றுடன் மட்டுமல்லாது தமது பிரதேசத்தில் கிடைக்காத பல வர்த்தக தெரிவுகளை நுகர வாய்ப்பினை அளிக்கின்றது. 

இதை மறுப்பது அல்லது தடுக்க முனைவது மக்களுக்கான உரிமையை மீறும் செயலாகும். உண்மையான வர்த்தகம் அல்லது வர்த்தக திறன் என்பது தனது நுகர்வோரை திருப்திப்படுத்தும் வகையில் அவர்களுக்கேற்ற சேவையை வழங்குவதாகும். போட்டி நிறை இவ்வுலகில் காலவோட்டத்திற்கேற்ப தன்னை மாற்றியமைக்காத எந்தவொரு வர்த்தகமும் அதன் ஸ்திரத் தன்மையை இழந்துவிடும். எனவே பருவகால சந்தையை விரும்பாத வர்த்தக பெருமக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள், நீங்கள் நிரந்தரமான வர்த்தக நிலையங்களை நடாத்தும் தொழிலதிபர்கள், ஆற்று நீரில் அசையாது நிற்கவேண்டிய ஆலமரங்கள். எனவே காலத்தின் தேவையறிந்து நீங்களும் பருவகால சந்தைக்கு உங்களை தயார்படுத்துங்கள். 

கோழைகளைப் போல போட்டியை ஒதுக்காமல் அதை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். குறித்த காலத்திற்குமட்டும் தள்ளுபடி விலைகளை அறிவியுங்கள், விளம்பரப்படுத்துங்கள். உங்கள் வினைத்திறனின் மிகுதியால் மன்னார் மக்கள் இயல்பாகவே மன்னார் வர்த்தக நிலையங்களை நாடும்படி செய்யுங்கள். மன்னார் மக்கள் நன்கறிவார்கள், தரமான பொருள் என்றும் மிகமலிவாக கிடைப்பதில்லை. எனவே உங்களுக்கான சந்தைவாய்ப்பு நிச்சயம் உண்டு. தவிர எமது மன்னார் இளம் வர்த்தக தொழில் முயற்சியாளர்களே நீங்கள் பருவகால சந்தையாளராக மாறுங்கள், மன்னாரின் பருவகால சந்தை தேவையை அறிந்து அதற்கான பொருட்களை விற்பனைக்கு கொண்டு வாருங்கள். மன்னாரின் பருவகால சந்தையை மன்னார் வர்தக கைகளில் மாற்றுங்கள். ஆனால் துணிவோடு… மாறாக வர்த்தகத்திற்கு பொருந்தாத ஆர்ப்பாட்டங்களோடு அல்ல. மன்னார் இளைஞரின் சுபீட்சமான வர்த்தக எதிர்காலத்தை நோக்கிய பாதையில் பயணிப்போம்.

என்றும் சேவையில்,
S .சதீஸ்,
தலைவர்-YBSL MANNAR
நிர்வாகசபை ஊறுப்பினர் - மன்னார் மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளனம்,
மன்னார்.
2014 மன்னார் பருவகால வர்த்தக சந்தைக்கு இலங்கை இளம் தொழில் முயற்சியாளர் ( YBSL ) மன்னார் கிளை ஆதரவு Reviewed by NEWMANNAR on December 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.