அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலுப்பைக்கடவை கள்ளுத் தவரணையை சேதப்படுத்திய 54 பெண்கள் பிணையில் விடுதலை


மன்னார் இலுப்பைக்கடவை பகுதியிலுள்ள கள்ளுத் தவரணை ஒன்றை சேதப்படுத்திய 54 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

54 பெண்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து தலா 10 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவர்களுக்கு நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் எச்சரிக்கை செய்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி இலுப்பைகடவை பகுதியிலுள்ள கள்ளுத் தவரணையை அப்பகுதி பெண்கள் உடைத்து சேதப்படுத்தியிருந்தனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இலுப்பைக்கடவை கள்ளுத் தவரணையை சேதப்படுத்திய 54 பெண்கள் பிணையில் விடுதலை Reviewed by NEWMANNAR on December 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.