ஜ.எஸ். போராளி குழுத்தலைவரின் மனைவி மகன் கைது
ஜ .எஸ். போராளிகள் குழுவின் தலைவரான அபூபக்கர் அல் பக் டாட்டியின் மனைவி மற்றும் மகனை சிரிய எல்லையில் வைத்து லெபனானிய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்தது.
10 நாட்களுக்கு முன் லெபனானுக்குள் பிரவேசித்த மேற்படி இருவரும் இராணுவ புலனாய்வுத் தகவலொன்றை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பக்டாட்டியின் மனைவி லெபனானிய பாதுகாப்பு அமைச்சில் விசாராணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய தேசத்தின் தலைவராக கடந்த மாதம் பக்டாடி பெயர் குறிப்பிடப்பட்டார்.
வட ஈராக்கிய நகரான மொசுலீல் அமெரிக்க தலைமையிலான படையினர் நடத்திய தாக்குதலில் பஹ்டாடி கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ உள்ளதாக வெளியாகிய செய்திகளுக்கு ஐ.எஸ். போராளிகள் கடந்த மாதம் மறுப்புத் தெரிவித்திருந்தனர். இதன் போது
அவர்கள் பஹ்டாடியுடையது என தெரிவிக்கப்பட்ட ஒலிநாடா செய்தியொன்றை வெளியிட்டிருந்தனர்.
ஜ.எஸ். போராளி குழுத்தலைவரின் மனைவி மகன் கைது
Reviewed by NEWMANNAR
on
December 03, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 03, 2014
Rating:


No comments:
Post a Comment