Sea Plane ல் மட்டக்களப்புக்கு இங்கிலாந்து பிரயாணிகள்
வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை கவரும் இடமாக மட்டக்களப்பு நகரமும் அதை அண்டியுள்ள பிரதேசங்களும் மாற்றம் பெற்று வருகின்றன.
இந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 3 உல்லாசப்பிரயாணிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து சீ பிளேன் மூலம் வியாழக்கிழமை (06) மட்டக்களப்பு வாவியில், அமைக்கப்பட்டுள்ள இறங்கு மேடையில் வந்திறங்கினர்.
தங்களது ஒரு மாத கால விடுமுறைக் காலத்தில், இரண்டுகிழமை நாட்களை மட்டக்களப்பில் தங்கியிருந்து மரபுரிமைமிக்க இடங்களைப் பார்வையிடவுள்ளதாகவும் மட்டக்களப்பின் இயற்கை அழகினைக் கண்டு கழிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தாங்கள் நேரடியாக கட்டுநாயக்காவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்ததாகவும் இப்பயணத்துக்கு கட்டணமாக ஒருவழிப்பாதைக்கு ஒருவருக்கு தலா 258 அமெரிக்க டொலர்களைச் செலுத்தியதாகவும்; தெரிவித்தனர்.
Sea Plane ல் மட்டக்களப்புக்கு இங்கிலாந்து பிரயாணிகள்
Reviewed by NEWMANNAR
on
December 10, 2014
Rating:

No comments:
Post a Comment