வடமராட்சியில் எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் எலும்புக்கூடு மீட்பு-Photo

வடமராட்சி முள்ளி பகுதியில் தேங்காய் பொச்சுமட்டைகளுக்குள் வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் புல் வெட்டிக் கொண்டிருந்த இராணுவத்தினர் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, அவ்விடத்துக்கு பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலனுடன் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே எரியூட்டப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எலும்புக்கூட்டுடன் பெண்கள் அணியும் ஆடைகளின் பாகங்களும் மீட்கப்பட்டன. நீதவானின் உத்தரவுக்கமைய பரிசோதனைக்காக எலும்புக்கூடு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
வடமராட்சியில் எரிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் எலும்புக்கூடு மீட்பு-Photo
Reviewed by NEWMANNAR
on
December 19, 2014
Rating:

No comments:
Post a Comment