மன்னார் பெரியகடையில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினால் அப்பகுதி மக்கள்தொடர்ச்சியாக பாதிப்பு-Photos
மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
சுமார் ஒரு வருட காலமாக இயங்கி வரும் குறித்த மது விற்பனை நிலையத்திற்கு மன்னார் நகர சபை இது வரை எந்த வித அனுமதியும் வழங்காத நிலையில் அரசியல் செல்வாக்குடன் குறித்த மது விற்பனை நிலையம் இயங்கி வருகின்றதாக மன்னார் நகர சபை குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலையில் மக்கள் வாழும் பகுதியான மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள குறித்த மது விற்பனை நிலையத்திற்கான இடத்தினை அப்பகுதியில் உள்ள சமாதான நீதவான் வழங்கியுள்ளார்.
குறித்த மது விற்பனை நிலையம் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மூடுவதே அவர்களின் நியதி.ஆனால் இரவு 9 மணி முதல் பல நிமிடங்கள் வரை திறந்து வைத்து விற்பனை செய்கின்றனர்.
குறித்த மது விற்பனை நிலையத்தினால் பெரியகடை பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பல்வேறு பிச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக காலை,மதியம்,மாலை,இரவு நேரங்களில் குறித்த மது விற்பனை நிலையத்திற்கு வரும் சில நபர்கள் மது போதையில் அப்பகுதியில் தர்க்கத்திலும் அனாகரிகமற்ற முறையிலும் நடந்து கொள்ளுகின்றனர்.
பாடசாலை மாணவிகள்,பெண்கள் அவ்வீதியூடாக வீடுகளுக்குச் சென்றால் தகாத வார்த்தைகளினால் கதைப்பதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக குறித்த மது விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளது.
மது விற்பனை நிலையம் அமைந்துள்ள வீட்டிற்கு அருகாமையில் போதைப்பொருள் பயண்பாடுகளும் இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை(18-12-2014) இரவு 9 மணிக்கு பின் குறித்த மது விற்பனை நிலையத்தில் சில சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இரவு 9 மணிக்கு பூட்டப்பட வேண்டிய மது விற்பனை நிலையம் மூடப்படவில்லை.டியாட்கள் போல் வந்த காடையர்கள் சிலருக்கு மது பாணம் வழங்கப்பட்ட நிலையில் அவ்விடத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக மது விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதில் உள்ள இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்தை கேள்வியுற்ற ஊடகவியலாளர் ஒருவர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்ற போது மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள குறித்த மது விற்பனை நிலையத்திற்கான இடத்தினை வழங்கிய சமாதான நீதவான் ஊடகவியலாளருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஊடகவியலாளரை பார்த்து நீ மன்னார் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கு 1 போத்தல் கொடுத்தால் நான் 2 போத்தல் கொடுப்பேன்.உன்னால் முடிந்ததை செய் பார்ப்பம் என சமாதான நீதவான் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.
நீ செய்தி வெளியிட்டால் நான் யார் என காட்டுவதாகவும்,மன்னார் பொலிஸாரை கொச்சைப்படுத்தியும் கதைத்துள்ளார்.
எனவே இப்பகுதி மக்களின் கோரிக்கை சமாதான நீதவானாக உள்ள குறித்த மது விற்பனை நிலையத்திற்கு இடத்தை கொடுத்தவர் தொடர்ச்சியாக இப்பகுதி மக்களை அச்சுரூத்தி வருவதாகவும்,தமக்கு எதிராக பொலிஸாரை பயண்படுத்தி சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இவ்விடையத்தில் அமைச்சர்கள்,வடமாகாண அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடமாகாண சபை உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
-இதே வேளை இப்பிரச்சினை தொடர்பில் மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் மன்னார், நகர சபையின் இவ்வருடத்துக்கான இறுதிக்கூட்டம் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற போது மன்னார் பெரிய கடையில் அமைந்துள்ள மது விற்பனை நிலையம் அகற்றப்படாமை குறித்தது தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறித்து அந்த மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பெரியகடையில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினால் அப்பகுதி மக்கள்தொடர்ச்சியாக பாதிப்பு-Photos
Reviewed by Admin
on
December 19, 2014
Rating:

No comments:
Post a Comment