2015 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இன்று
2015 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இன்று நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
2014 ஆம் ஆண்டுக்கான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல 37 .6 மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, நாடு பூராகவுமுள்ள சுமார் 42 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதற்காக 2, 700 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளது.
இம்முறை தரம் 6 மற்றும் தரம் 10 மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.
பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
2015 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் தேசிய வைபவம் இன்று
Reviewed by NEWMANNAR
on
December 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 01, 2014
Rating:


No comments:
Post a Comment