அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் இணையத்தளங்கள் ஆபாச இணையத்தளங்களை விட மோசமானது: தொ.தொ.ஒ.ஆ.
தனிப்பட்ட அரசியல் நோக்கத்துக்காக அரசாங்கத்தை எதிர்த்து செயற்படும் இணையத்தளங்கள் ஆபாச இணையத்தளங்களை விட மோசமானது என , தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக பல போலி இணையத்தளங்கள் செயற்படுகின்றன. இவ்விணையத்தளங்கள் எங்கிருந்து செயற்படுகின்றன என்பது தெரியவில்லை. இவ்வாறு செயற்படும் இணையத்தளங்கள் ஆபாச இணையத்தளங்களை விட மிகவும் மோசமானது.
நாட்டு மக்களுக்கு தவறான விடயங்களை வெளிப்படுத்தும் இவ்வாறான இணையத்தளங்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குறித்த இணையத்தளங்கள் பதிவு செய்யப்படாமலிருப்பின் உடனடியாக பதிவு செய்யவேண்டும் எனவும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் இணையத்தளங்கள் ஆபாச இணையத்தளங்களை விட மோசமானது: தொ.தொ.ஒ.ஆ.
Reviewed by NEWMANNAR
on
December 14, 2014
Rating:

No comments:
Post a Comment