அண்மைய செய்திகள்

recent
-

இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவின் இந்திய தொடர்பு; விசாரணைகள் ஆரம்பம்

இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவை ஆதரிக்கும் பிரபலமான ட்விட்டர் தளத்தை பெங்களூர் நகரத்தைச் சேர்ந்தவர் நடத்திவந்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்திய பொலிஸ் அதிகாரிகள் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

”ஷமி விட்னஸ்” என்ற பெயரிலான இந்த குறிப்பிட்ட ட்விட்டர் கணக்கை நடத்துபவர் யார் என்கிற அடையாளத்தை பிரிட்டன் தொலைக்காட்சி அலைவரிசையான செனல்-4 தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

ட்விட்டர் தளத்தை நடத்திச் செல்லும் நபரை, ஹெய்தி என அழைக்கும் செனல்-4 தொலைக்காட்சி, அவர் தொடர்பான முழுமையான தகவல்களை​ வெளியிடவில்லை.

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் அவர் நிர்வாகியாக பணிபுரிவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

”ஷமி விட்னஸ்” என்கிற ட்டுவிட்டர் கணக்கானது இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு வந்ததுடன், இஸ்லாமிய அரசு அமைப்பு குறித்து ஆங்கில மொழியில் கிடைத்துவந்த தகவல்களுக்கான முக்கிய தளமாகவும் இந்த ட்விட்டர் கணக்கு செயற்பட்டு வந்தது.

பிரிட்டன் தொலைக்காட்சியின் இந்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்து தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இந்திய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து பெங்களூரு நகர பொலிஸார் கர்நாடக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்புக்கான பிரிவு மற்றும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியன விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவின் இந்திய தொடர்பு; விசாரணைகள் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on December 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.