4,000 போலி பேஸ்புக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன – அதுல புஷ்பகுமார
கடந்த மூன்று வாரங்களில் 810 போலி இணையத்தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவிக்கின்றது.
அடையாளம் காணப்பட்டுள்ள போலி இணையத்தளங்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து செயற்படுத்தப்படுவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் அதுல புஷ்பகுமார குறிப்பிடுகின்றார்.
போலியான தகவல்களை வெளியிடுதல் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அவதூறு ஏற்படுத்தல் இந்த போலி இணையத்தளங்களின் நோக்கமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நான்காயிரத்துக்கும் அதிகமான போலி பேஸ்புக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் அதுல புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
ஆட்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதே இந்த போலி பேஸ்புக் கணக்குகள் இயக்கப்படுவதன் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என அதுல புஷ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலப்பகுதியில் சுமார் 500 போலி பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும குறிப்பிட்டுள்ளார்.
4,000 போலி பேஸ்புக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன – அதுல புஷ்பகுமார
Reviewed by NEWMANNAR
on
December 13, 2014
Rating:

No comments:
Post a Comment