அண்மைய செய்திகள்

recent
-

ரூபாய் 7 ஆயிரத்து 536 மில்லியன் வடக்கு கல்வி அமைச்சிற்கு ஒதுக்கீடு

வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு மொத்த பாதீட்டில் 7 ஆயிரத்தி 536 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் கோரப்பட்ட நிதியினைவிட குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதனால் இளைஞர் விவகாரங்களுக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படாததோடு முன்பள்ளி ஆசிரி யர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 1000 ரூபாய் மட்டுமே அதிகரிக்க முடியும் என வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா  தெரிவித்தார்.

நேற்றைய வரவு செலவுத்திட்ட இரண்டாவது அமர்வில் கல்வி அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பிரமாண அடிப்படையிலான நன் கொடை நிதி
ஒதுக்கீட்டின் கீழ் கௌரவமான மாகாண சபை அமைச்சர்களின் நிதி ஒதுக்கீட்டில் அவர்களினால் முன்மொழியப்படும் வேலைத்திட்டங்கள் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் முன்பள்ளி துறைகளில் அமுல் படுத்தப்படவுள்ளன.

குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை மூலதன செலவாக கல்வி, கலாசார விளையாட்டுத்துறைகளில் பின்வரும் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப் படவுள்ளது.

கல்வித் துறைக்கான ஒதுக்கீடா னது பாடசாலைக்கான புதிய கட்டிடங்களை அமைத்தல், புதிய ஆசிரிய விடுதிகளை அமைத்தல், சேதமுற்ற பாடசாலை கட்டிடங்களை திருத்துதல், சேதமடைந்த ஆசிரியர் விடுதிகளைத் திருத்துதல், வலயக் கல்வி பணிமனை நிர்மாணித்தல், பாடசாலை மாணவர்கள் வகுப்பறை தளபாட திருத்த வேலைகள், பாடசாலைகளுக்கான புதிய தளபாட கொள்வனவு, பெறுமதி சேர் வரிக் கொடுப்பனவு ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள 12 வலயங்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகளிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் பாட சாலைகள் தெரிவு செய்யப்பட்டு திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

விளையாட்டுத் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட மூலதன நிதி யானது விளையாட்டு மைதானங் களின் புனரமைப்பு உள்ளக விளை யாட்டு மைதானங்கள் அமைப்பு மற்றும் விளையாட்டு உபகரணங் கள் கொள்வனவு போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும்.

கலாசார திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது இசைக் கருவிகளின் கொள்வனவுக்காக வும் கலாசார மண்டபங்களின் புன ரமைப்பு வேலைகளுக்காகவும் ஆவணக் காப்பகத்தை உருவாக்கு வதற்காகவும் பயன்படுத்தப்பட வுள்ளது.

மீண்டு வரும் செலவீனம்
மாகாண கல்வி அமைச்சு

 வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயற்பாடுகளுக்காக 2015 ஆம் ஆண்டுக்கென கோரப் பட்ட நிதி ரூபா 325 மில்லியன் ஆகும். இதற்காக 210 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் ரூபாய் 178 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது. எனவே எமக்கு சிபார்சு  செய்யப்பட்ட 210 மில்லிய னையும் பின்வருமாறு செலவு செய்வதற்கு முன்மொழியப்படுகிறது.

1. மாற்றுத் திறனாளிகளுக்காக ரூபாய் 20 மில்லியன் 2015ஆம் நிதி ஆண்டுக்கு கோரப்பட்டது. ஆனால் ஒதுக்கீடு குறைக்கப்பட்ட தால் ரூபாய் 7 மில்லியன் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. இந் நிதியிலிருந்து விசேட தேவைக்குரியவர்களுக் கான உபகரணங்களின் கொள் வனவு இச் செலவில் மேற்கொள் ளப்படவுள்ளது.

2. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி மானியம் ரூபாய் 4 மில்லியன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும் பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும் பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்நிதி வழங்கப்படவுள்ளது.

3. இளைஞர் விவகாரங்களை கையாளுவதற்கு ரூபாய் 16.7 மில் லியன் எம்மால் கோரப்பட்ட போதும் கோரப்பட்ட நிதி வழங்கப்படாத தால் எம்மால் இளைஞர் விவகாரத் திற்கு எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யமுடியவில்லை.

4. மனிதவள முகாமைத்துவத் திற்கு 2014ஆம் ஆண்டிற்கு ரூபாய் 6 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் 2015 ஆம் ஆண்டிற்கு நிதி ஆணைக்குழுவால் ரூபாய் 4.8 மில்லியன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக வேலைத்திட் டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு மேற் கொள்ளப்படவுள்ளது.

5. முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த ரூபாய் 3000 ஊக்குவிப்புக் கொடுப் பனவு 2000 ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. 2014-ல் இதற்காக ரூபாய் 90 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

எனினும் 2015-ல் இவ் ஊக்கு விப்புக் கொடுப்பனவை ரூபாய் 6 ஆயிரமாக உயர்த்த வடக்கு மாகாண சபை அங்கீகரித்தும் கூட நிதி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப் பட்ட தொகை ரூபாய் 94 மில்லி யன் மட்டுமே என்பதால் அதிகரித்த கொடுப்பனவை வழங்க இயலா துள்ளது.

ரூபாய் 6 ஆயிரமாக ஊக்கு விப்புக் கொடுப்பனவு வழங்க வேண்டுமாயின் 2015ஆம் ஆண் டுக்கு ரூபாய் 144 மில்லியன் தேவை என்பதை கோரியிருந்தும் நிதி ஆணைக்குழு மேற்குறிப்பிட்ட தொகையையே சிபார்சு செய்துள்ளது.

முன்பள்ளி ஆசிரியருக்கு ரூபாய் ஆயிரம் அதிகரித்து ரூபாய் 4 ஆயிரமாக மாதாந்த ஊக்குவிப்புப் படியை வழங்கவே எமது நிதி போது மானதாக உள்ளது.

6. 2015 ஆண்டுக்கு கலாசார திணைக்களத்திற்காக எம்மால் கோரப்பட்ட தொகை ரூபாய் 68 மில்லியன் ஆகும். இதனால் ஒதுக் கப்பட்ட தொகை ரூபாய் 43 மில்லியன் ஆகும். 2014 ஆம் ஆண்டை விட ரூபாய் மூன்று மில்லியன் குறைவாகவே அனுமதி வழங் கப்பட்டுள்ளது.

எனவே ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவின் கலை கலாசார அபிவிருத்திற்கும் சென்ற வருடம் (2014) ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இவ்வருடம் எதிர்பார்த்த நிதி கிடைக்காமையின் காரணமாக இத் தொகை ரூபாய் 3 இலட்சமாக வழங்கப்பட முடியும். எமது பண் பாடு கலாசார விழுமியங்களையும் பேணிப்பாதுகாப்பதற்கு கலாசார திணைக்களத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தல் மிக அவசிய மானதாகும்.

மாகாண கல் வித்திணைக் களம்

 *மாகாணக் கல்வித் திணைக் களத்திற்கு ரூபாய் 7156 மில்லி யன் 2015 ஆம் ஆண்டுக்கான மீண்டுவரும் செலவீனங்களுக் காக ஒதுக்கப் பட்டுள்ளது.

இது அதிபர் கள், ஆசிரியர் கள் மற்றும் கல் விசாரா ஊழியர் களின்  ஆளணி கொடுப்பனவு களுக்காகவும் மற்றும் தொலை  பேசிக் கட்டணம், மின்சாரம், போக் குவரத்துப்படி செலவுகளுக் காக வும் ஒதுக்கப்பட் டுள்ளது.

 *2014 ஆம் ஆண்டு இதற் கென ரூபாய் 6909 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டிற்கு எம்மால் மாகாணக் கல்வி திணைக்களத்தில் மீண்டு வரும் செலவினங்களுக்காக ரூபாய் 7227 மில்லியன் கோரப்பட்டிருந் தது. இச் செலவீனங்களுக்காக 7156 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.

1இரண்டாம் நிலை கல்விப் பாடசாலைகளின் சிறு திருத்தத்திற்கு ரூபாய் 49 மில்லியனும்.

2ஆரம்ப கல்வி பாடசாலை சிறு திருத்தத்திற்கு ரூபாய் 19 மில்லியனும்.

கட்டட சிறுதிருத்தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 68 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் ரூபாய் 46 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது.

*இதேபோல் பாடசாலை களுக்கு மின்சாரம் நீர்க்கட்டணம் செலுத்த ரூபாய் 19.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்றவருடம் (2014 ரூபாய் 11 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் பல பாடசாலையில் திறக்கப்பட்ட நிலை யில் இந் நிதி போதாமையாக உள் ளமையால் இத் தொகை குறைந் தது நான்கு மடங்காகவேனும் அதிகரிக்கப்பட வேண்டும்.

  *மாணவர்களுக்கான புல மைப் பரிசில் கொடுப்பனவு 2014 ஆம் ஆண்டில் ரூபாய் 26 மில்லி யனிலிருந்து 2015 ஆம் நிதியாண் டுக்கு ரூபாய் 30 மில்லியனாக அதி கரிக்கப்பட்டுள்ளது.

எனினும் மத்திய அரசின் பாதீட்டில் புலமைப்பரிசில் தொகை அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளதால் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் நிதி தேவைப்படுகிறது.

அதாவது ரூபாய் 500லிருந்து ரூபாய் 1500 ஆக இத்தொகை அதி கரிக்கப்பட்டுள்ளதால் தற்போதைய ஒதுக்கீட்டானது மூன்று மடங்காக அதிகரிக்கப்படவேண்டும்.

 * மாகாணக்கல்வி திணைக் கள நிர்வாக செலவீனங்களுக்கு ரூபாய் 418 மில்லியனும் விசேட தேவையுடைய மாணவர்களின் மீண்டெழும் செலவிற்காக ரூபாய் 8.5 மில்லியனும் முறைசார கல் விப்பிரிவுக்காக ரூபாய் 11 மில்லி யனும் கல்விதிட்டமிடல் அபி விருத்திக்கு ரூபாய் 8 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 *பாடசாலைகளின் தரமான  உள்ளீட்டு நடவடிக்கைகளுக்கு ரூபாய் 194 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் ரூபாய் 169 மில்லியன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந் தது. இதன் மூலம் கல்வி செயற் பாட்டுக்காக தர உள்ளீடுகள் ஓரள வுக்கு வழங்கப்பட முடியும்.

  *பாடசாலை மாணவர்களுக் கிடையே தேசிய ரீதியில் நடை பெறும் போட்டிகளில் வட மாகா ணம் 9 ஆவது இடத்திலிருந்து 8,7,6 என முன்னேறி 2014ஆம் ஆண்டு 5 ஆவது இடத்தினைப் பெற்றிருப்பது பெருமையாகும்.

இம் மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக் காக ரூபாய் 3 மில்லியன் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் எமது மாகாண மாணவர்களின் அடைவு மட்டத் தினை மேலும் அதிகரிக்க முடியும் என்பது உறுதியானதாகும்.

விளையாட்டுத் திணைக்களம்

 * விளையாட்டுத் திணைக் களத்திற்கு 2014 ஆம் ஆண்டு ரூபாய் 36 மில்லியன் ஒதுக்கப்பட் டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு எம்மால் ரூபாய் 55 மில்லியன் கோரப்பட்டுள்ளது. குறித்த ரூபாய் 55 மில்லியனும் எமக்கு விடுவிக் கப்பட்டுள்ளது.

சென்ற வருடத்தைவிட விளை யாட்டுத்திணைக்களத்திற்கு ரூபாய் 20 மில்லியன் கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் விளை யாட்டுத்துறை அபிவிருத்திக்கு பல் வேறு வேலைத்திட்டங்கள் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட வுள்ளது.

  மாகாணமட்ட விளையாட் டுப் போட்டிகளை நடத்துதல், விளை யாட்டு வீரர்களுக்காக பயிற்சி செயல மர்வுகள்  (Coaching Camp) தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள் ளும் வீர, வீராங்கனைகளுக்காக செலவீனங்கள் விளையாட்டுத் துறையில் சர்வதேச தேசிய மட்டங்களில் சாதனை படைக்கும் வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் வர்ண இரவுகள் (Colours Night) நிகழ்வினை நடத்துதல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளது எனத் தெரிவித்தார்.
ரூபாய் 7 ஆயிரத்து 536 மில்லியன் வடக்கு கல்வி அமைச்சிற்கு ஒதுக்கீடு Reviewed by NEWMANNAR on December 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.