அண்மைய செய்திகள்

recent
-

ரூபாய் 5 ஆயிரத்து 158 மில்லியன் வடக்கு சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கீடு

2015 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் வடமாகாண சுகாதார அமைச்சிற்கு மீண்டெழும் செலவீன ஒதுக்கீடாக 4 ஆயிரத்து 350. 371 மில்லியன் ரூபாயும் முதலான செலவீன ஒதுக்கீடாக 808.5 மில்லியனுமாக மொத்தம் 5 ஆயிரத்து  158.871 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் நேற்றைய வரவு செலவுத்திட்டமர்வில் வடமாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறையின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது வடக்கு மாகாணமானது கடந்த 30 வருட கால கொடிய யுத்தத்தினால் பல் வேறு வழிகளிலும் சொல்லொ ணாத் துயரங்களையும் கடுமையான பாதிப்புக்களையும் எதிர்நோக்கிய மாகாணமாகும்.

இக் காலப்பகுதியில் கிளிநொச்சி மற்றும் முல் லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான வைத்தியசாலைகள் முற்றாக சேதம் அடைந்ததுடன் ஏனைய மாவட்டங்களில் உள்ள சில வைத்தியசாலைகளும் முற்றா கவோ அல்லது பகுதியாகவோ சேதம் அடைந்திருந்தன.

எனவே போருக்குப் பின்னரான காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் அடிப்படைச் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தேவைப்பாடு அதி கமாகக் காணப்பட்டது.

வட மாகாணத்திற்குரிய இந்த முதலாவது மாகாண சபை அமை வதற்கு முன்னர் மத்திய சுகாதார அமைச்சு, அரச சார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டு மூல வழங்கள் மற்றும் மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் உதவியுடன் யுத்தத்தால் சேதம் அடைந்த வைத்தியசாலைகளின் அடிப்படைக் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இருந்த போதிலும் மேலும் பல வைத்தியசாலைகளில் உட்கட்டுமான வசதிகளினை மேம்படுத்த வேண்டிய தேவை இன்னும் உள்ளது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

கடந்த ஆண்டு இம் மாகாண சபையை நாம் பொறுப் பேற்ற போது இங்கு காணப்படும் 99 வைத்தியசாலைகளில் 40 வைத்தியசாலைகள் நிரந்தர வைத்தியர்கள் இன்றி இயங்கிக் கொண்டு இருந்தன என்பதை நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோன்.

இருந்த போதிலும் எமது முயற்சியினாலும் மத்திய அரசாங்கத்தினுடைய அனுசரணையுடனும் இன்று இவற்றின் சில குறிப்பிடத்தக்க வைத்தியசாலைகளிற்கு எம்மால் வைத்தியர்களை நியமிக்க முடிந்துள்ளது.

இருந்த போதிலும் இன்னும் சில வைத்தியசாலைகள் நிரந்தர வைத்தியர்கள் இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

காலக் கிரமத்தில் மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

2014 ஆம் ஆண்டுக்குரிய மீண்டெழும் செலவீனத்திற்குரிய மதிப்பீடு ரூபா 3,532.957  மில்லியன். இவற்றில் 31 ஆம் திகதி நவம்பர் மாதம் 2014 வரையான மொத்த மீண்டெழும் செலவீனம் ரூபா 2, 971, 885,  515. 53 ஆகும்.

மேலும் 2014 ஆம் ஆண்டுக்குரிய மூல தனச் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்ட 1, 396.60 மில்லியன் ரூபாவில் 31 ஆம் திகதி நவம்பர் மாதம் 2014 வரையான மொத்த செலவீனம் ரூபாய் 764,  091,  499.72 ஆகும்.

மூலதனச் செலவீன ஒதுக்கீ டானது மாகாண சபை நியதிசட்டம் 561.61 மில்லியன் ரூபா, மத்திய மாகாண திறைசேரி என்பவற்றினூடாக வழங்கப்படும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதிக்கொடை,  பிரமாண அடிப்படையிலான கொடை, சுகாதாரத்துறை சார் அபிவிருத்தித் திட்டம் மற்றும் யுனிசெவ் ஆகிய வற்றினையும் மத்திய சுகாதார அமைச்சின் ஊடாக வழங்கப்படும் நிதிக் கொடையினையும் மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்படும் நிதிக் கொடைகளை யும் உள்ளடக்கியது.

இருந்தபோதும் 2014 ஆம் ஆண்டுக்குரிய மாகாண சுகாதார அமைச்சிற்கான மாகாண திறை சேரியின் ஊடாக அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீடு 500.3 மில்லியன் ரூபா வாகும்.

இவ்வொதுக்கீட்டிற்காக 30. 11.2014 வரை பெறப்பட்ட கட்டுநிதி 387.216 மில்லியன் ரூபாவில் 275.076 மில்லியன் ரூபா அதாவது கிடைக்கப்பெற்ற கட்டுநிதியில் 71% இது வரை செலவு செய்யப்பட் டது என அவர் தெரிவித்தார்.
ரூபாய் 5 ஆயிரத்து 158 மில்லியன் வடக்கு சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கீடு Reviewed by NEWMANNAR on December 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.