கொள்ளைக் குற்றச்சாட்டில் சிறை சென்றவர் மீண்டடுவரும்போது காசுமாலை வரவேற்பு.
கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டதைத் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாணசபை ஐ.தே.க. உறுப்பினரும், நீர்கொழும்பு அமைப்பாளருமான ரொய்ஸ் பெர்னாண்டோ, நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் 5000 ரூபா நோட்டில் மாலை அணிவித்து அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
நீர்கொழும்பில் நகை மாளிகையொன்றில் இடம்பெற்ற 02 கோடி ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளைக் குற்றச்சாட்டில் சிறை சென்றவர் மீண்டடுவரும்போது காசுமாலை வரவேற்பு.
Reviewed by NEWMANNAR
on
December 20, 2014
Rating:

No comments:
Post a Comment