விகடன் பத்திரிகை குழுமத்தின் தலைவரும், மறைந்த 'ஜெமினி' வாசனின் மகனுமான எஸ். பாலசுப்ரமணியம் சென்னையில் காலமானார்.
விகடன் பத்திரிகை குழுமத்தின் தலைவராக இருந்தார் பாலசுப்ரமணியம்
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று(வெள்ளிக்கிழமை)இரவு அவர் உயிரிழந்தார்.
காலஞ்சென்ற பாலசுப்ரமணியனுக்கு வயது 79. வணிகவியல் பட்டதாரியான இவர், அவரது தந்தையும் பரபல திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ‘ஜெமினி’ எஸ் எஸ் வாசன் நிறுவிய ஆனந்த விகடன் பத்திரிகையின் நிர்வாகக் குழுவில் 1950களின் மத்தியப் பகுதியில் இணைந்தார்.
பின்னர் அவரது தந்தையில் மறைவுக்கு பிறகு ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விகடன் பத்திரிகை ஆகியவற்றின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
வாசனைப் போலவே, பாலசுப்ரமணியமும் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து விகடன் குழுமத்தின் தலைவராக அவரது மகன் இப்போது பொறுப்பு வகித்து வருகிறார்.
அவரது மறைவுக்கு பல்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
December 20, 2014
Rating:

No comments:
Post a Comment