மன்னாரில் சமாதானம், நல்லிணக்கத்திற்காக சர்வமத மற்றும் சமூகத்தலைவர்களை வலுப்படுத்தும் விசேட செயலமர்வு (Photos)
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக சர்வமத மற்றும் சமூகத்தலைவர்களின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டிலும்,மன்னார் ஆர்.பி.ஆர் அமைப்பின் அனுசரனையிலும் இன்று சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை மன்னார் ஆஹாஸ் விடுதியில் இடம் பெற்றது.
நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு மத மற்றும் சமூகத்தலைவர்களின் பங்கு அவசியமானது.
இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை மன்னார் மாவட்டத்திலுள்ள சர்வ மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் பங்களிப்பின் அடிப்படையில் மதங்களுக்கிடையிலான சர்வமத பேரவை உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் சர்வமத வேறுபாடுகளின் அடிப்படையில் இனங்களுக்கடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சர்வ மதத்தலைவர்கள் மற்றும் சமூக மட்ட தலைவர்கள் ஆகியோரை ஒன்றினைத்து குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய சமாதான பேரவையின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சமன் செனவிரட்ண, தேசிய சமாதான பேரவையின் திட்ட உத்தியோகஸ்தர் எஸ்.ஏ. அப்துல் அமான், சமாதானத்திற்கும் மீளிணக்கத்திற்குமான வளங்கள் நிறுவனத்தின்(ஆர்.பி.ஆர்.) திட்ட முகாமையாளர் எஸ்.செல்வநன்தராஜன் மற்றும் தேசிய சமாதான பேரவையின் மன்னார் மாவட்ட அங்கத்தவர்கள் உட்படசர்வமதத்தலைவர்கள்,சரூகமட்டத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சமாதானம், நல்லிணக்கத்திற்காக சர்வமத மற்றும் சமூகத்தலைவர்களை வலுப்படுத்தும் விசேட செயலமர்வு (Photos)
Reviewed by NEWMANNAR
on
December 13, 2014
Rating:
No comments:
Post a Comment