தலைமன்னாரில் மழை காரணமாக இடம் பெயர்ந்த மக்களை செல்வம் எம்.பி நேரில் சென்று பார்வை-.-Photos
மன்னார் மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தலைமன்னார் பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமன்னார் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளமையினாலும் வெள்ள நீர் வீடுகளினுள் சென்றுள்ளமையினாலும் அப்பகுதி மக்கள் ஆலங்களிலும் பொது மண்டபங்களிலும் இடம் பெயர்ந்து சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
இடம் பெயர்ந்துள்ள மக்களையும்,வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ள பகுதிகளையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று வெள்ளிக்கிழமை(19) மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.
அத்தோடு இடம் பெயர்ந்துள்ள குழந்தைகளுக்கான பால்மா பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டுள்ளார்.
இதே வேளை தமது இடப்பெயர்வு மற்றும் பாதீப்புக்கள் குறித்து அதிகாரிகள் இது வரை எந்த உதவுகளையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.
அத்தோடு தலைமன்னார், மன்னார் பிரதேச சபைக்கு உற்பட்ட பகுதியில் அமைந்துள்ள போதும் மன்னார் பிரதேச சபையின் தலைவரே அல்லது உறுப்பினர்களோ இது வரை தம்மை வந்து பார்வையிடவில்லை எனவும் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இக்கிராம மக்களின் சொந்த முயற்சியினால் தற்போது வெள்ள நீரை வெளியேற்றி வருவதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் வெள்ள நீரை வேளியேற்ற தேவையான உதவிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இடம் பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் முழு விபரங்கள் இது வரை வெளியாகவில்லை
(மன்னார் நிருபர்)
(20-12-2014)

Reviewed by NEWMANNAR
on
December 20, 2014
Rating:
No comments:
Post a Comment