அண்மைய செய்திகள்

recent
-

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் சம்பளம் உயர்வு: அமைச்சர் ரவி கருணாநாயக்க


அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தில் கூறியது போன்று, எதிர்வரும் 29 ஆம் திகதி சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு முதல்கட்டமாக 5,000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜுன் மாதம் மேலும் 5,000 ரூபாய் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்குமாறு பரிந்துரை செய்யப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

'தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்காக திறைச்சேரியில் போதுமான நிதி இல்லை எப்படியிருப்பினும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் அதேவேளை, பொதுமக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்' என அவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் சம்பளம் உயர்வு: அமைச்சர் ரவி கருணாநாயக்க Reviewed by NEWMANNAR on January 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.