அண்மைய செய்திகள்

recent
-

மார்ச் மாதம் வரை மழை இல்லை


திர்வரும் மார்ச் மாதம் வரை போதுமானளவு மழை வீழ்ச்சியை எதிர்ப்பார்க்க முடியாதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமையதற்போது நிலவும் மழையற்ற வறட்சியான வானிலை நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜயசேகர கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மார்ச் மாதமளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, வறட்சியான வானிலை காரணமாக நீர் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை நீடிக்குமானால் சில பகுதிகளுக்கான நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் வரை மழை இல்லை Reviewed by NEWMANNAR on January 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.