அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில்உயிரியல் பிரிவில்முதலிடத்தை பெற்ற எமில் றொசிங்ரனுக்கு பாராட்டு விழா-Photos


புலம்பெயர் ஒன்றியம் விடத்தல் தீவு என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் புத்தகம் வழங்கலும் விடத்தல்தீவு மன் தூய யோசவ்வாஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் புலமைப் பரிசில் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் புத்தகம் வழங்கும் நிகழ்வும்,  உயிரியல் பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றவருமான எமில் றொசிங்ரனுக்கான பாராட்டு விழாவும் இன்று (09/01/2015) காலை 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் புலம்பெயர் ஒன்றியம் விடத்தல் தீவு என்ற அமைப்பினால் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக எமது கிராமத்தைச் சேர்ந்தவரும், பேசாலை பத்திமா மகா வித்தியாலயத்தின் அதிபருமான அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லஸ் அவர்களும் மற்றும் பங்குத்தந்தை செல்வநாதன் பீரிஸ், அருட்சகோதரி சலோமி, ஒன்றிய இணைப்பாளர் வைத்திய கலாநிதி ம.மதுரநாயகம், பாடசாலை அதிபர் தேவராஐன், எமில் றொசிங்ரன், அவரது பெற்றோரும் வருகை தந்நிருந்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன் மருத்துவத்துறைக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவனுக்கான பரிசில்களும் ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
 






மன்னார் மாவட்டத்தில்உயிரியல் பிரிவில்முதலிடத்தை பெற்ற எமில் றொசிங்ரனுக்கு பாராட்டு விழா-Photos Reviewed by NEWMANNAR on January 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.