பாரிஸில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளை சுற்றி வளைத்த பொலிஸார்
பிரான்ஸ் தலைநகரம் பாரிஸில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடாத்திய தீவிரவாதிகள் பாரிஸுக்கு வட கிழக்காக 42 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊரில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களை பொலிசார் சுற்றி வளைத்ததாக பிரஞ்சு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் சிலரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தேடப்பட்டுவந்த இருவருக்கும் பொலிசாருக்கும் இடையே நடந்துவரும் துப்பாக்கிச் சூட்டில் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
பாரிஸின் சார்ல்-த-கோல் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை தீவிரவாதிகள் தாக்கிய இத் தாக்குதலில்12 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருக்கும் தீவிரவாதிகளை பொலிசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இருவரும் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
பாரிஸில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளை சுற்றி வளைத்த பொலிஸார்
Reviewed by NEWMANNAR
on
January 09, 2015
Rating:

No comments:
Post a Comment