அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலைகளின் தேவைக்காக பணம் அறவிடல் தடை செய்யப்பட்டுள்ளது


பாடசாலைகளின் தேவைக்காக பணம் அறவிடுவதனை உடன் அமுலுக்குவரும் வகையில் தடைவிதிக்க கல்வி அமைச்சு இன்று தீர்மானித்துள்ளது.

அனைத்து அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலை அபிவிருத்திக்காக பழைய மாணவர் சங்கம், வகுப்பு நலன்புரி சங்கம் ஆகியவற்றினூடாக அறவிடப்படும் அனைத்து அறவீடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டினை விநியோகித்து வருடாந்த வசதிக்கட்டணத்தை பாடசாலையின் அவசிய செலவுக்காக மாத்திரம் அதிபர்கள் நிதி சேகரிக்க முடியும்.

வசதிக்கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் உளரீதியில் பாதிப்புக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வசதிக்கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் கிராம சேவையாளர் ஊடாக, அவரால் செலுத்த முடியாது என்பதனை உறுதிப்படுத்தினால், குறித்த மாணவர் கொடுப்பனவுகளிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் தேவைக்காக பணம் அறவிடல் தடை செய்யப்பட்டுள்ளது Reviewed by NEWMANNAR on January 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.