இலங்கை நாட்டிற்கு ஒரு புதிய திருப்பத்தைத் தரக்கூடிய தலைவருக்கே நாம் வாக்களிக்கவேண்டும்- மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழு.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மன்னார் மாவட்ட மக்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
எதிர்வரும் 08.01.2015ல் இடம் பெறவுள்ள நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்களாகிய நாம் எமது வாக்குரிமையைப் பயன்படுத்தி நாட்டை ஆளும் அரசியல் தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளோம்.
ஒரு நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது குடிமக்களின் பொறுப்பு வாய்ந்த பாரதூரமான கடமையாகும். மக்களால், மக்களுக்காக மக்களே ஆளுகின்ற ஆட்சியே ஜனநாயகமாகும்.
இந்த ஜனநாயக வாக்குரிமை என்பது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமையாகும்.
தம் விலையுயர்ந்த வாக்குகளைச் சரிவரப் பயன்டுத்திக்கொள்வது ஒவ்வொருவரினதும் தலையான கடமையுமாகும்.
இதை இரண்டாம் வத்திக்கான் சங்கம் தெளிவாக கூறுகின்றது.'தங்களுக்கிருக்கும் வாக்குரிமையைச் சுதந்திரத்தோடுசெயல்படுத்த,எல்லாக் குடிமக்களுக்கும் உரிமை மட்டுமன்று,கடமையும் உண்டு. இதைஅவர்கள் நினைவில் கொண்டு,பொது நலனை மேம்படுத்த முன்வர வேண்டும்.'(வத்திக்கான் திருச்சங்கம் - இன்றைய உலகில் திருச்சபை ஏடு இல: 75)
இத்தேர்தல் சுதந்திரமான, நீதியான நியாயமான தேர்தலாக இருக்க வேண்டும்.
அதாவது எந்த வித ஊழல்களுமின்றி ஏமாற்று வேலைகளுமின்றி இடம் பெறவேண்டும். அதற்கு வாக்காளர்கள் எவ்வித அச்சுறுத்தல்களுக்கோ,பயமுறுத்தலுக்கோ அடிமைப்படாது,வெறும் சலுகைகளை நம்பி ஏமாறாது, தமது அடிப்படைச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவது ஒவ்வொருவரினதும் உன்னதமானதும் தட்டிக்கழிக்க முடியாததுமான அடிப்படை உரிமையாகும்.'வெளியே கூறப்படும் எந்த கட்டுக்கதைகளையும் நம்பிவாக்களிக்கும் உரிமையை இழந்து விடவேண்டாம். மக்கள் தங்கள் வாக்கெடுப்பு நிலையங்களுக்குச் சென்று எதுவித அச்சமுமின்றி வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' -
இவ்வாறுபொதுமக்களிடம் தேர்தல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.எந்;தவொரு பொதுமகனும் வாக்களிப்பதற்கு அசௌகரியம் என்று கருத்தினால் மன்னார் மாவட்டத் தேர்தல் திணைக்கள அலுவலுகம் 023 2222289 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளமுடியும். இவ்விடயம் சம்மந்தமாக மேலதிக உதவிகளுக்கு உங்கள் பங்குத்தந்தை மூலமாக மன்னார் மாவட்டத் தேர்தல் திணைக்களத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
இத்தேர்தல் மூலமாக தமிழினத்துக்கு என்ன பாரிய தீர்வு கிடைக்கப்போகிறது என்று நாம் அசட்டையாக இருந்தோமையானால், புறக்கணிப்புச் செய்தோமேயானால், அல்லது பயத்தின் நிமித்தம் போகாமலிருப்போமேயானால்,
நமக்கு நாமே கேடுவிளைவிக்கின்றவர்கள் ஆவோம். தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் எமது வாக்குரிமைகளைத் தகுந்த முறையில் பயன்படுத்தும் பாரிய பொறுப்பு நமக்கு உண்டு. தமிழினம் சகல உரிமைகளோடும் வாழவேண்டும். நீதி,சமத்துவம் பேணப்பட வேண்டும். மனித உரிமைகள்,மனிதமாண்புகள் மதிக்கப்பட வேண்டுமென்றால் இலங்கை நாட்டிற்கு ஒரு புதிய திருப்பத்தைத் தரக்கூடிய தலைவருக்கே நாம் வாக்களிக்கவேண்டும்.
எல்லா மக்களையும் நீதியோடும்,சமத்துவத்தோடும்,அன்போடும் ஆட்சிசெய்ய நல்லவராகத் தோன்றுபவர்க்குதமிழ் மக்கள் அனைவரும் விதி விலக்கின்றி வாக்களிக்க முன்வருவது இன்றியமையாததாகும். யுத்தத்தின் வடுக்களும் வேதனைகளும் இன்றும் தீராத சூழ்நிலையிலே,கருத்துச் சுதந்திரம் இல்லாதஒரு சூழ்நிலையிலே, இன்றும் தடுப்புமுகாம்களில் அடைத்துவைத்துசித்திரவதை,வன்புணர்வு,கொலைசெய்தல், காணமற் போகச் செய்தல் போன்ற எண்ணற்ற செயல்பாடுகள் தமிழர்கள் மத்தியிலே அரங்கேறுகின்ற காலச்சூழலிலே,இந்தேர்தல் வழியாக,நேர்மையும்,அமைதியும்,மகிழ்ச்சியும் நிறைந்தபுத்துலகம் படைத்திடக்கூடியஒருநாட்டுத் தலைவரைதேர்ந்தெடுக்கமுன்வருவோம். அபிவிருத்திகள் மற்றும் சலுகைகள் தந்தால் போதும்,என்றுநாம் திருப்திஅடைந்துவிடமுடியாது. இவற்றையெல்லாம் விட்டுஎமது இனத்தின் அரசியல் இருப்பையும்,சுதந்திரத்தையும் மதிக்கின்றநோக்கத்திற்காகவேநாம் வாக்களிக்கவேண்டும்.கடந்தவடமாகாணதேர்தலின்போதுதமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாகஅணிதிரண்டதுபோன்று, இத்தேர்தலிலும் தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டுவாக்களிப்போமாக.
சிறைப்பட்டோர்க்குவிடுதலையும் ஒடுக்கப்பட்டோருக்குஉரிமைவாழ்வும் தரவந்தஇயேசுபிரானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் நாம்,உரிமைக் குடிமக்களாகவாழப் பிறந்தவர்கள் என்பதைஉணர்ந்தவர்களாக8ம் திகதிஅதிகாலைஎழுந்துஎமதுமனச்சாட்சிக்கும் இனத்திற்கும் துரோகம் செய்யாதுசிரமங்களையும் பல்வேறுஅழுத்தங்களையும் பாராதுஎமது இனத்திற்குசுதந்திரத்தையும்,தன்மானத்தையும்,விடிவையும் தரக்கூடியதாகவாக்களிக்கச் செல்வோம்.
மேலும் உங்களுடைய பெறுமதிமிக்க வாக்குகள் நிராகரிக்கப்படாதவாறு சரியாக வாக்களிக்கவும்;. நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைவருக்கான பெட்டிக்குள் சதுரக்கோடுகளில் முட்டாது (x) புள்ளடி அடையாளத்தை நடுப்பகுதியில் இடவும். விருப்புவாக்கினை நீங்கள் வேறு யாருக்கும் போடாவிட்டாலும் உங்கள் முதல் வாக்கு செல்லுபடியாகும் என்பதை மனதில் வைத்து செயல்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கூறப்பட்ட சிந்தனைகளின் அடிப்படையிலே எமது நாட்டின் நன்மைக்காகவும்,தமிழ் இனத்தின் விடியலை மனத்தில் கொண்டவர்களாகவும்,தமிழினத்திற்கு சுதந்திரத்தையும், சமஉரிமையும் தரக்கூடியதாகவும் சரியானவகையிலே வாக்களிக்க இறைவன் அருள்பாலிப்பாராக.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டிற்கு ஒரு புதிய திருப்பத்தைத் தரக்கூடிய தலைவருக்கே நாம் வாக்களிக்கவேண்டும்- மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழு.
Reviewed by NEWMANNAR
on
January 04, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 04, 2015
Rating:


No comments:
Post a Comment