அண்மைய செய்திகள்

recent
-

அரசின் 06 கோடிக்கு விலை போனவரே வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன்-வடமாகாண இளைஞர் ஒன்றியம் கண்டணம்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் ஞாகுணசீலன் விடுத்துள்ள கோரிக்கையினை வடமாகாண இளைஞர் ஒன்றியம் வண்மையாக கண்டித்தள்ளது.

இவ்விடையம் தொடர்பில் இளைஞர் ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் என். குணசீலன் விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிரிசேன வை ஆதரிக்க கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கும் தனக்கும் உடன்பாடில்லை என்றும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

வடமாகாண சபை உறுப்பினர் என்.குணசீலன் மன்னார் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டார்.தமிழ் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்ட அவருக்கு தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தனது கட்சி சார்பில் அவருக்கு ஆசனத்தை வழங்கியது.வைத்தியராக கடமையாற்றிய அவர் அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிராய்வா முதல் நிலையையும்,சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் இரண்டாம் நிலையினையும்,வைத்தியரான ஞா.குணசீலன் மூன்றம் நிலையினையும் அடைந்தனர்.

-இதன் போது கட்சி ரீதியாக வழங்கப்பட்டு வந்த அமைச்சுப்பதவிகளில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ விற்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பதவி அக்கட்சி சார்பாக போட்டியிட்டு அதி கூடிய வாக்கை பெற்றுக்கொண்ட பா.டெனிஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தனக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படாமை குறித்து பல்வேறு அறிக்கைகளையும்,எதிர்ப்புக்களையும் தெரிவித்து வந்தவரே வடமாகாண சபை உறுப்பினர் ஞ.குணசீலன்.

பல பிரச்சினைகளை கட்சிக்கள் ஏற்படுத்திய இவர் தொடர்பில் பல உண்மைகள் உள்ள போதும் அதனை விபரிக்கும் நேரம் இது அல்ல.கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மன்னாருக்கு வரும் போது வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாகவும்,அதற்காக 6 கோடி ரூபாய் பணம் வழங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.


இருதியில் பணம் வழங்கப்படவில்லை.அவரின் எதிர்பார்ப்பும் தோழ்வியில் முடிவடைந்தது.இந்த நிலையிலே பத்திரிக்கையாளர்களை ஒன்றினைத்து இருவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஞா.குணசீலன் என்ன செய்தார் என்ற கேல்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இவரது நடவடிக்கைளை கண்காணித்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ உடனடியாக கட்சியில் இருந்து இவரை நீக்க வேண்டும்.உண்ணதமானவர் என்றால் உடனடியாக தனது மாகாண சபை உறுப்பினர் பதிவியை தூக்கி எறிய வேண்டும்.

தங்கள் சுக போகங்களுக்காக வாக்களித்த மக்களையும்,ஆதரவு வழங்கிய கட்சியினையும் கொச்சைப்படுத்தும் இவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.என வடமாகாண தமிழ் இளைஞர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் 06 கோடிக்கு விலை போனவரே வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன்-வடமாகாண இளைஞர் ஒன்றியம் கண்டணம். Reviewed by NEWMANNAR on January 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.