அண்மைய செய்திகள்

recent
-

வென்னப்புவ கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலீசாரின் பிடியில் இருந்த போது தற்கொலை-2ம் இணைப்பு

வென்னப்புவ நயினாமடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தில் நால்வர் படுகொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவ்விட்டில் கடமையாற்றிய காவலாளியும் அவரது மனைவியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் கலேவெலயைச்சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 தாய், தந்தை மற்றும் அவர்களுடைய மூன்று நாட்கள் சிசு மற்றும் ஐந்து வயது பெண் குழந்தை ஆகிய இருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 1ஆம் திகதி சடலங்களாக மீட்கப்பட்டனர். 

இந்த படுகொலைச் சம்பவம் 31ஆம் திகதி இரவு அல்லது முதலாம் திகதி அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகத் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் நால்வரும் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது வீட்டுத் தோட்டத்தில் குழியொன்றுக்குள் போட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தும்புத் தொழிற்சாலையின்; உரிமையாளரும் மாரவில வைத்தியசாலையில் வைத்தியராகப் பணியாற்றி வரும் அவருனை மனைவியும் அவர்களது பிள்ளைகள் இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டனர். 

வீட்டுக்காவலாளி, முதலாளியின் ஐந்து வயதான மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கே முழுக்குடும்பத்தையும் அவர், கொலைச்செய்திருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

2ம்  இணைப்பு 


வென்னப்புவ கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலீசாரின் பிடியில் இருந்த போது தற்கொலை

வென்னப்புவ லுணுவில பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாஓயாவுக்குள் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலைக்காக சந்தேகநபர் பயன்படுத்திய கோடரியை கண்டுபிடிப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

நீர்கொழும்பு தோப்பு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பி பாலத்திலிருந்து மாஓயாவுக்குள் குதித்துள்ளார்.

சந்தேகநபர் தப்பித்துச் செல்ல மேற்கொண்ட முயற்சியின் போது அவரை தடுக்க முயன்ற குற்றப்புலனாய்வு திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நைனா மடம் பகுதியில் ஒரே குடும்த்தைச் சேர்ந்த நால்வரது சடலங்கள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் குழி ஒன்றில் போடப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.

லுணுவில வைத்தியசாலையின் பெண் வைத்திய அதிகாரி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நால்வரதும் இறுதி கிரியைகள் வென்னப்புவ ரோமன் கத்தோலிக்க மயானத்தில் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வென்னப்புவ கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலீசாரின் பிடியில் இருந்த போது தற்கொலை-2ம் இணைப்பு Reviewed by NEWMANNAR on January 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.