அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கன்,மாவிலங்கேணி ஆகிய பாடசாலைகளுக்கு வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கல்விக்காக விசேட உதவி-Photos


மன்னார் முருங்கன் மற்றும் மாவிலங்கேணி பாடசாலைகளுக்கு வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்களை இன்று வெள்ளிக்கிழமை காலை கையளித்துள்ளனர்.

வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியிலிருந்து மடிக்கணினி,மல்ட்டி மீடியா கருவி, அதற்க்கான திரை ஆகியவை வழங்கி வைக்கப்பட்டது.

முதலில் முருங்கன் ம.வி பாடசாலைக்கு குறித்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் இணைந்து குறித்த உபகரணங்களை பாடசாலை அதிபர் பி.சந்தியோகு அவர்களிடம் கையளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவிலங்கேணி றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலைக்குச் சென்ற அமைச்சர் பா.டெனிஸ்வரன் பாடசாலை அதிபர் ஜீ.குனசேகர் அவர்களிடம் வைபவ ரீதியாக குறித்த உபகரணங்களை கையளித்தார்.இதன் போது பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர் ஆகியோர் இணைந்து அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.











மன்னார் முருங்கன்,மாவிலங்கேணி ஆகிய பாடசாலைகளுக்கு வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கல்விக்காக விசேட உதவி-Photos Reviewed by NEWMANNAR on January 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.