அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் விசேட நிதி உதவி....- Photos



மன்னார் பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலயத்துக்கு வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தனது பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் நிதியினை இன்று வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச் சென்று பாடசாலை அதிபர் அருட் சகோதரர் ஸ்டானிஸ் லொஸ்வர்களிடம் கையளித்தார்.

மன்னார் பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி பணிக்காகவே குறித்த பணம் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் பாடகளைகளுக்கு கடந்த காலங்களில் உதவிகளை மேற்கொள்ளுவதாக வழங்கி வந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தற்போது குறித்த நிதியினை வழங்கியுள்ளார்.இதே வேளை மன்னார் முருங்பன் ம.வி பாடசாலைக்கு ஒரு தொகுதி உபகரணங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது .

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றும் போது வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் இப்பாடசாலையின் இவ்வருடம் உயர்தரம் பரிட்ச்சை எழுதவுள்ள மாணவர்களில் மாவட்ட மட்டத்தில் முதல் 5 இடங்களுக்குள் வருபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்குவேண் என தெரிவித்தார்.

இவ்வாறு அமைச்சர் கருத்து தெரிவித்தமை மாணவர்கள் மத்தியில் படிக்க வேண்டும் என்ற ஓர் ஆர்வத்தை தூண்டும் என்று அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.





மன்னார் பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் விசேட நிதி உதவி....- Photos Reviewed by NEWMANNAR on January 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.