அண்மைய செய்திகள்

recent
-

100 கிலோகிராம் தங்கம் மோசடி: ஷிரந்திக்கு எதிராக முறைப்பாடு


100 கிலோகிராம் தங்கத்தை மோசடி செய்தார் என்று முன்னாள் முதற்பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திறைசேரியிலுள்ள தங்கத்தை விற்பனை செய்ய முற்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷாமலி பெரேராவினாலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் வாஸ் குணவர்தனவின் மனைவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியுள்ளதாவது, 'திறைசேறியிலுள்ள 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான 100 கிலோகிராம் தங்கத்தை விற்பனை செய்ய முற்பட்டார் என்று எனது கணவர், பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த போது இராணுவ புலனாய்வுப் பிரிவிலிருந்து தகவல் வந்தது.

 இது தொடர்பான விசாரணையின் போது மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் அடிபட்டது. அதன்பின்னர், எனது கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். என்னுடைய மகனையும் கைது செய்தனர். இது தொடர்பில் எந்தவொரு தகவலையும் வெளியிட வேண்டாம் என்று என்னையும் எனது குடும்பத்தாரையும் அச்சுறுத்தினார்கள். இது விடயமான தகவல்களை வெளியிட்டால், இனி ஒருபோதும் உன்னுடைய கணவர் வெளியே வர முடியாதளவுக்கு வேலை செய்வோம் என்றும் என்னை அச்சுறுத்தினார்கள்' என்று அவர் மேலும் கூறியுள்ளார். 

100 கிலோகிராம் தங்கம் மோசடி: ஷிரந்திக்கு எதிராக முறைப்பாடு Reviewed by NEWMANNAR on January 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.