அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சமுர்த்தி கொடுப்பனவு, நிவாரணங்கள் அரசியல் பாகுபாடு காரணங்களால் பலர் இவ் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை-


சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் 90 வீதத்திற்கும் அதிகமானோர் அரசியலில் பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் பிரதேச செயலாளர்களுக்கும் கட்டுப்படாத தன்மையே காணப்படுகிறது. இவர்களால் மேற்கொள்ளப்படும் சமுர்த்தி கொடுப்பனவு, நிவாரணங்கள் அரசியல் பாகுபாடு காரணங்களால் வறுமைக்கோட்டில் உள்ள பலர் இவ் உதவித்திட்டங்களைப் பெற முடியாத நிலையில் உள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் ஏ.மெரினஸ் பெரேரா தெரிவித்தார்.

மன்னார் பள்ளிமுனை கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர சபை உறுப்பினர்கனான எஸ். குமரேஸ் ஏ . மெரினஸ் பெரேரா ஆகியோர் கடல் வெள்ள நீர் உட்புகுதல் தொடர்பாக மக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

அதில் கலந்து கொண்டு மக்களின் ஆதங்கங்களைக் கேட்ட பின் மன்னார் நகர சபை உறுப்பினர் ஏ.மெரினஸ் பெரேரா இன்று வியாழக்கிழமை(29)ஊடகங்கக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தின் சமுர்த்தி நியமனத்தில் பாரிய முறைகேடுகளும் அநீதிகளும் இழைக்கப்பட்டுள்ளது.

முன்னார் ஜனாதிபதி சந்திக்கா அம்மையார் காலத்தில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் வடக்கில் மன்னார் மாவட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அமுல் படுத்தப்பட்டது.

சமுர்த்திக்கென தனியான அமைச்சர் இருந்த போதும் இங்கு வேறொரு அமைச்சர் மூலம் நியமனங்கள் வழங்கப்பட்டது.

பொது அறிவித்தலோ அல்லது வெளிப்படையான நேர்முகப்பரீட்சைகளோ இல்லாமல் தகுதியில்லாத பலர் அரசியல் ரீதியாக உள்வாங்கப்பட்டு சமுர்த்தி நியமனத்தின் தன்மை பற்றி அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு ஆள் பிடிப்பது மட்டும் இல்லாது மக்களையும் பிழையான முறையில் வழி நடாத்தும் செயல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக அரசால் கொண்டு வரப்பட்ட இவ் நலத்திட்டத்தினை தனி மனித அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துகின்றார்கள்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 90 வீதத்திற்கும் அதிகமானோர் அரசியலில் பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் பிரதேச செயலாளர்களுக்கும் கட்டுப்படாத தன்மையே காணப்படுகிறது.

இவர்களால் மேற்கொள்ளப்படும் சமுர்த்தி கொடுப்பனவு, நிவாரணங்கள் அரசியல் பாகுபாடு காரணங்களால் வறுமைக்கோட்டில் உள்ள பலர் இவ் உதவித்திட்டங்களைப் பெற முடியாது உள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் உரிய துறைசார் அமைச்சர்கள் இப்பகுதிகளுக்கு வராமல் விடுவதும் இப்பகுதியைச் சேர்ந்த அமைச்சரே அனைத்துத் துறைகளிலும் சம்மந்தம் இல்லாது அதிகாரம் செலுத்துவதுமே ஆகும்.

எனவே இப்புதிய அரசில் இத்துறைக்கு பொறுப்பான கௌரவ அமைச்சரில் நாமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது பல மாற்றங்களை செய்வதனூடாக உரிய அதிகாரிகளுக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கி இவ்விடயங்களில் உரிய கவனம் செலுத்தி புதிய செயல் திட்டங்கள் ஊடாக இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்து புதிய அரசில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்வார்;கள் என நம்புகின்றேன்.என மன்னார் நகர சபை உறுப்பினர் ஏ.மெரினஸ் பெரேரா தெரிவித்தார்.
மன்னாரில் சமுர்த்தி கொடுப்பனவு, நிவாரணங்கள் அரசியல் பாகுபாடு காரணங்களால் பலர் இவ் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை- Reviewed by NEWMANNAR on January 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.