இடைக்கால வரவு செலவுத்திட்டம் – முழு விபரம்
பி.ப 3.34 – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூபா 5000 ஆக குறைப்பு – நிதி அமைச்சர்.
பி.ப 3.33 – சிரேஷ்ட பிரஜைகளுக்கான பஸ் கட்டணம் 50% இனால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 3.29 – மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீ லங்கா விமான சேவை ஒன்றிணைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 3.26 – பெப்ரவரி முதல் மஹாபொல புலமைப்பரிசில் ரூபா 5000 ஆக அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 3.20 – பாவிக்கப்படாத அரச வாகனங்கள் விற்பனை செய்யப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 3.17 – விளையாட்டு ஔிபரப்பிற்காக மாத்திரம் இயங்கும் தொலைக்காட்சி நிலையத்திற்கு ரூபா 1000 மில்லியன் வரி விதிக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 3.15 – 5000 ரூபாவாக இருந்த விகாக பதிவுக் கட்டணம் 1000 ரூபாவாக குறைப்பு – நிதி அமைச்சர்
பி.ப 3.14 – கசினோ உரிமையாளர்கள் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 1000 மில்லியன் ரூபா வரி செலுத்த வேண்டும் – நிதி அமைச்சர்
பி.ப 3.08 – சீமெந்திற்கான விலை ரூபா 90 இனால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 3.06 – ஹைபிரிட் வாகனங்களுக்கான வரியும் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 3.06 – 1000 cc திறனுக்கு குறைந்த வாகனங்களிற்கான இறக்குமதி வரி 15% இனால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 3.02 – அரச வங்கிகளில் ரூபா 2 இலட்சத்திற்கு கிறைவான தங்க நகை அடகுக்கான வட்டி முற்றாக நீக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.58 – 12.5 கிலோகிராம் காஸ் சிலின்டரின் விலை ரூபா.1595 – நிதி அமைச்சர்
பி.ப 2.55 – 1 கிலோ 60 ரூபாவினாலும் , மாசி கருவாட்டின் விலை 200 ரூபாவினாலும் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.53 – 1 கிலோ கொத்தமல்லியின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.52 – தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.50 – கோதுமை மாவின் விலை 12.50 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.49 – சஸ்டஜின் பால் மாவின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.48 – 400 கிராம் பால்மாவின் ஆகக்கூடிய சில்லறை விலை ரூ.325 – நிதி அமைச்சர்
பி.ப 2.47 – சீனியின் விலை 10 ரூபாவினால் இன்றிரவு குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.44 – மண்ணெண்ணையின் விலை மேலும் 6 ரூபாவினால் குறைக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.43 – கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% ஆகவும் சுகாதார துறைக்கான ஒதுக்கீடு 3% ஆகவும் அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.39 – அரச வைத்தியசாலைகளில் வௌி நோயாளர் பிரிவு 24 மணி நேரமும் செயற்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.35 – பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிதி ரூ.5 மில்லியனிலிருந்து ரூ10 மில்லியனாக அதிகரிப்பு – நிதி அமைச்சர்
பி.ப 2.33 – பசும் பாலிற்கான வாங்கும் விலை ரூ.10 இனால் அதிகரிப்பு – நிதி அமைச்சர்
பி.ப 2.32 – தேயிலை மற்றும் இறப்பருக்கான நிர்ணய விலை அதிகரிப்பு – நிதி அமைச்சர்
பி.ப 2.31 – குறைந்த விலைக்கு கை உழவு இயந்திரம் – நிதி அமைச்சர்
பி.ப 2.30 – நெல்லிற்கான நிர்ணய விலை ரூ.50 – நிதி அமைச்சர்
பி.ப 2.28 – உடன் அமுலுக்கு வரும் வகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.20,000 கொடுப்பனவு – நிதி அமைச்சர்
பி.ப 2.25 – ஓய்வூதிய பெறுபவர்களுக்கான வங்கி வைப்பு வட்டி வீதம் அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.23 – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதியை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் – நிதி அமைச்சர்
பி.ப 2.22 – ஓய்வூதியக் கொடுப்பனவு ஏப்ரல் மாதத்திலிருந்து ரூ.1000 இனால் அதிகரிக்கப்படும் – நிதி அமைச்சர்
பி.ப 2.21 – நாட்டின் ஆடைக் கைத்தொழிலை முன்னேற்றுவோம் – நிதி அமைச்சர்
பி.ப 2.19 – தனியார் துறையினருக்கும் ஆகக்குறைந்தது ரூ.2,500 இனால் சம்பளத்தை அதிகரிக்குமாறு கேட்டுகொள்கிறேன் – நிதி அமைச்சர்
பி.ப 2.17 – அமைச்சரவை குறைப்பு ரூ.2.5 பில்லியன் செலவு குறைக்கப்பட்டுள்ளது – நிதி அமைச்சர்
பி.ப 2.17 – இதுவே அதிகூடிய சம்பள அதிகரிப்பாகும் – நிதி அமைச்சர்
பி.ப 2.12 – முன்னைய அரசாங்கத்தின் கடன்களை செலுத்த வேண்டிய நிலை இந்த அரசிற்கே ஏற்பட்டுள்ளது – நிதி அமைச்சர்
பி.ப 2.09 – அரச சேவையாளர்களின் சம்பளம் ரூ.10,000 ஆல் அதிகரிக்கப்படும். இதில் அரைப்பகுதி தற்போதும் மிகுதி ஜீன் மாதம் வழங்கப்படும். – நிதி அமைச்சர்
பி.ப 2.07 – தனியே தெரிவு செய்யப்பட்ட நகரத்தை மாத்திரம் அபிவிருத்தி செய்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – நிதி அமைச்சர்
பி.ப 2.04 -2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலக செலவு 9000 கோடியிலும் அதிகம் – நிதி அமைச்சர்
பி.ப 2.01 – மொத்தக் கடன் தொகை 8800 பில்லியன் ரூபாய்கள் – நிதி அமைச்சர்
பி.ப 1.59 – நாட்டு மக்கள் முற்றாக கடனாளியாகியுள்ளனர் – நிதி அமைச்சர்
பி.ப 1.55 – பெற்றோலிய கூட்டுத்தாபன ஹெட்ஜிங் மூலமாக அரசிற்கு 120 அமெரிக்க டொலர்கள் செலவு – நிதி அமைச்சர்
பி.ப 1.54 – முன்னைய அரசின் வரவு செலவுத்திட்ட சுருக்கம் – நிதி அமைச்சர்
பி.ப 1.51 – 2009 ஆண்டு தேர்தல் முடிவின் பின்னர் எதிர்த்துத் போட்டியிட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் நாம் ஹெலிகொப்டரை வழங்கினோம் வீடு செல்வதற்காக – நிதி அமைச்சர்
பி.ப 1.42 – இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் – நிதி அமைச்சர்
பி.ப 1.38 – எமது அரசுடன் இணைந்து நாட்டை முன்னேற்ற ஒன்றிணையுங்கள் – நிதி அமைச்சர்
பி.ப 1.37 – மைத்திரி நிர்வாகத்தில் புதிய இலங்கை உருவாகுகின்றது – நிதி அமைச்சர்
பி.ப 1.35 – உரையை ஆரம்பித்தார் நிதி அமைச்சர்.
இடைக்கால வரவு செலவுத்திட்டம் – முழு விபரம்
Reviewed by NEWMANNAR
on
January 29, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 29, 2015
Rating:


No comments:
Post a Comment