எரிபொருட்களின் விலை குறைப்பு மன்னார் மாவட்ட மீனவர்கள்,விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-என்.எம்.ஆலம்.
தற்போது பதவியேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசு முதல் தடவையாக எரிபொருட்களுக்கான விலையினை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பானது மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாச தலைவரும்,வடமாகாண மீனவ கூட்டுறவு இணையத்தின் தலைவருமான என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
புதிய அரசு முதற்கட்டமாக எரிபொருட்களின் விலையினை குறைப்பு செய்துள்ளமையால் மக்கள் பல வகையிலும் நன்மையடைவார்கள்.பஸ் கட்டணங்களும் குறைக்கப்படும்.
இதனால் பயணிகளின் அசௌகரியங்களை தடுக்க முடியும்.தற்போதைய காலத்தில் மன்னார் மாவட்டத்தில் தற்போது மீன் பிடி அதிகரித்துள்ளது.
அதிகலவான மீன்கள் பிடிபடுகின்றது.இந்த வகையில் எரிபொருட்களின் விலை குறைப்பு மீனவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை இத்துடன் நிற்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலையினையும் குறைக்க வேண்டும்.
குறிப்பாக ஏழை மீனவர்களும்,விவசாயிகளும் பயன்படுத்தும் சகல வித உணவுப்பொருட்களினதும் விலை குறைக்கப்பட வேண்டும்.இதனால் துன்பத்தை சுமந்த மக்கள் சந்தோசத்தை அனுபவிக்க முடியும்.என அவர் தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலை குறைப்பு மன்னார் மாவட்ட மீனவர்கள்,விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது-என்.எம்.ஆலம்.
Reviewed by NEWMANNAR
on
January 22, 2015
Rating:

No comments:
Post a Comment