அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உடனடியாக விலை குறைப்பு செய்யவில்லை என விசனம்.-Photos


எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் விலை குறைப்புச் செய்யப்பட்ட போதும் மன்னார் நகரில் உள்ள மன்னார் மாந்தை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று(22) வியாழக்கிழமை காலையிலே விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருட்களின் விலையைக் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைப்பு செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலைங்களிலும் எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது.

விலை குறைப்பு செய்யப்பட்டதையடுத்து பெற்றோல் 1 லீற்றர் 30 ரூபாவால் குறைந்து 128 ரூபாவுக்கும், 92 ஒக்ரேன் செறிவு பெற்றோல் 33 ரூபா குறைந்து 117 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

டீசல் ஒரு லீற்றர் 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 95 ரூபாவாகவும் சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 23 ரூபாவினால் குறைத்து 110 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 16 ரூபாவினால் குறைத்து 65 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நேற்று நள்ளிரவு முதல் மன்னாரில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் உடனடியாக விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் மன்னாரில் உள்ள மன்னார் மாந்தை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உடனடியாக விலை குறைப்பு மேற்கொள்ளாது இன்று வியாழக்கிழமை(22) காலையிலே விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக வாகன உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பில் மன்னார் மாந்தை மேற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் பொது முகாமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,

-நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்புச் செய்யப்பட்டது.எனினும் எமது எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள எரிபொருட்களின் இருப்பு எடுப்பு உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

உடனடியாக இன்று(22) வியாழக்கிழமை காலை இருப்பு எடுப்பு மேற்கொள்ளப்பட்டவுடன் தற்போது புதிதாக அமுல் படுத்தப்பட்ட விலைக்கே எரிபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.





மன்னார் மாந்தை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உடனடியாக விலை குறைப்பு செய்யவில்லை என விசனம்.-Photos Reviewed by NEWMANNAR on January 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.