அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கில் யார் ஆட்சி அமைப்பது ? இன்று கொழும்பில் இறுதி முடிவு


கிழக்கு மாகாணத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது சம்பந்தமான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர் குழுவும் முஸ்லிம் காங்கிரஸின் உயர் மட்டக்குழுவும் கூடுகிறது.



கொழும்பில் கூட்டப்படவுள்ள இரு கட்சிக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு காணப்படவில்லையாயின் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமென இரு கட்சிகளின் பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர்கள் தெரிவித்தார்கள்.

அண்மையில் ஏற்பட்ட தேசிய அரசியல் மாற்றம் காரணமாக கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சிக்கிருந்த பலம் குறைந்து எதிர்க்கட்சிகள் பலம் கொண்டிருந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐ.தே. கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி எடுக்கலாமென்ற அபிப்பிராயம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இதேவேளை கடந்த இரு நாட்களுக்கு முன் மு. காங்கிரஸ் மற்றும் த.தே. கூட்டமைப்பின் உயர் குழுவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்படவில்லையென்று தெரிவிக்கப்படுகிறது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று ????? கொழும்பில் இரு கட்சிகளைச் சேர்ந்த உயர் மட்டக்குழுவினர் கலந்துரையாடி ஒரு இறுதித் தீர்மானத்துக்கு வரவுள்ளனர்.

முதலமைச்சர் பதவி முஸ்லிம் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமென்பதில் முஸ்லிம் காங்கிரஸ் அழுங்குப் பிடியை பின்பற்றி வருவதாகவும் இதேவேளை ஜனநாயக முறையின்படி தற்போது கிழக்கில் அதிக அங்கத்தவர்களைக் கொண்ட கட்சியாக கூட்டமைப்பு காணப்படுவதால் முதலமைச்சர் பதவியை தாமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கருத்து இக்கட்சியின் ஆதரவாளர் மத்தியில் பரவலாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கில் யார் ஆட்சி அமைப்பது ? இன்று கொழும்பில் இறுதி முடிவு Reviewed by NEWMANNAR on January 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.