கடலில் மூழ்கி கர்ப்பிணி உட்பட மூவர் பலி
கிண்ணியா, காக்காமுனை ஆரூப் பிரதேசத்திலிருந்து கப்பல்துறைக்கு படகில் சென்ற 7 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கச்சான் அறுவடைக்காக இன்று சனிக்கிழமை (03) காலை சென்றுக்கொண்டிருந்த போதே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மூன்று மாத கர்ப்பிணியான அஷ்மா (வயது 17) உவைஸ் தனூஷ் (வயது 12) மற்றும் கடாபி முனிஷா (வயது 7) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களுடன் சென்ற மற்றைய நால்வருக்கும் எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லை. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை; மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரவித்தனர்.
கடலில் மூழ்கி கர்ப்பிணி உட்பட மூவர் பலி
Reviewed by NEWMANNAR
on
January 03, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 03, 2015
Rating:
.jpg)

No comments:
Post a Comment