அண்மைய செய்திகள்

recent
-

யூசி மாஸ் (UCMAS) மன்னார் கிளையின் 20-வது ஆண்டு நிறைவு விழா-சாதனை மாணவர்கள் கௌரவிப்பு

 யூசி மாஸ் (UCMAS) மன்னார் கிளையின் 20-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மன்னார் & முருங்கன் மையங்களுக்கு இடையிலான போட்டி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை (26) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.


நேற்று சனிக்கிழமை (25) காலை மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் மன்னர் மற்றும் முருங்கன்மையங்களுக்கு இடையிலான போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றது.


அதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை மாலை யூசி மாஸ் (UCMAS) மன்னார் கிளையின் 20-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது.


யூசி மாஸ் (UCMAS) மன்னார் நிறுவனத்தின் இயக்குனர் நடராஜா கேதீஸ்வரன் மற்றும் திருமதி யசோதா கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில்  இடம்பெற்ற  குறித்த நிகழ்வில்   முதன்மை    விருந்தினராக இலங்கை வங்கி, மன்னார் கிளையின் முகாமையாளர்

 ஐ. அருளானந்தன் சோசை கலந்து கொண்டார்.


கௌரவ விருந்தினர்களாக முருங்கன் ஆரம்பப் பாடசாலை அதிபர்  ஏ.ஆர். தேவநேசன்,மன்னார்/எருக்கலம் பிட்டி மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். அஸ்மி,மன்னார்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி அதிபர் அருட்சகோதரர் சாந்தியாகு F.S.C,மன்னார்  லா சால் ஆங்கில   பாடசாலை உப அதிபர் அருட்சகோதரர் பிரிட்டோ பின்டோ F.S.C,மன்னார்  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சி.பி. வின்சென்ட்,மன்னார்  மாவட்ட செயலக கணக்காளர் எஸ். செல்வகுமார்,இலங்கை யூசி மாஸ் செயற்பாட்டு பணிப்பாளர் ,தலைமை நடுவர் திருமதி. சித்ரா இளமநாதன்,யூசி மாஸ் இலங்கை    கிளை உரிமை ப் பணிப்பாளர், திருமதி தயாளினி பாசங்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இதன்போது கடந்த வருடம் ஜோர்ஜியாவில் நடைபெற்ற யூசி மாஸ் சர்வதேச மட்ட போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி வெற்றிக் கேடயம் வழங்கி வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களினால் வெற்றி கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில்  யுசி மாஸ் (UCMAS)    மன்னார் மற்றும் முருங்கன் கிளையை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது




















யூசி மாஸ் (UCMAS) மன்னார் கிளையின் 20-வது ஆண்டு நிறைவு விழா-சாதனை மாணவர்கள் கௌரவிப்பு Reviewed by Vijithan on April 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.