அண்மைய செய்திகள்

recent
-

தபாற்காரர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல்


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரும் ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானால் தாக்கப்பட்டதாக கூறப்படும் தபால்காரர் பெரியசாமி ஞானசேகரன், பதுளை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தபாற்காரரான பெரியசாமி ஞானசேகரன், பசறை-எல்ல வீதியிலுள்ள நீர்போட் தோட்டத்தில் வாக்காளர் அட்டைகளை விநியோகித்துவிட்டு இன்று பிற்பகல் திரும்பிகொண்டிருந்துள்ளார். 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டுவிட்டு, மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தனது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் அந்த தோட்டபாதையில் பயணித்துள்ளார். அங்கிருந்து வந்துகொண்டிருந்த தபாற்காரரை கண்டதும் வாகனத்திலிருந்து இறங்கிய செந்தில் தொண்டமான, நீ என்ன பெரிய அய்யாவா, என்று கேட்டுகேள்வியில்லாமல் தபாற் காரரை கன்னத்தில் அறைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந';த சம்பவம் தொடர்பில், தபாற்காரர் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

அந்த முறைப்பாட்டில் தான் விநியோகிப்பதற்கு வைத்திருந்த 35 வாக்காளர் அட்டைகளையும் காணவில்லை என்றும் தன்னுடைய கையடக்கதொலைபேசியை காணவில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் வினவுவதற்கு மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு பல முறை முயன்ற போதிலும் அம்முயற்சி பயனளிக்கவில்லை.


தபாற்காரர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல் Reviewed by NEWMANNAR on January 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.