முன்னாள் பிரதமரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவும் பொலிஸாரிடம் சரண்
முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்னவின் புதல்வரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அனுராத ஜயரத்ன பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியமை, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.
மாகாண சபை உறுப்பினர் அனுராத ஜயரத்னவுடன், மேலும் மூவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் சரணடைந்துள்ளார்.
அகலவத்தை நகரில் பிரதேச அரசியல்வாதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தி, அவரை முழந்தாளிட வைத்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் பேரில் அவரை கைதுசெய்வதற்காக கடந்த சில தினங்களாக பொலிஸார் விசாரணை முன்னெடுத்துவந்தனர்.
முன்னாள் பிரதமரின் மகனும் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவும் பொலிஸாரிடம் சரண்
Reviewed by NEWMANNAR
on
January 21, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 21, 2015
Rating:


No comments:
Post a Comment