அண்மைய செய்திகள்

recent
-

முசலியில் மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு மின்னிணைப்பு எப்போது கிடைக்கும்

மன்னார் முசலிப்பிரதேச செயலகத்திற்குற்பட்ட பிரதேசங்களில் மீளக்குடியேறிய குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு இது வரை மின் இணைப்பு வழங்கப்படவிடவில்லை. இம்மக்களுக்கு வடக்கின் வசந்தத்தின் ஊடாக மின் இணைப்பு வழங்கவதற்குரிய நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.பல மாதங்கள் ஆகியும் இவர் கட்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.இது தொடர்பான உரிய விசாரனைகள் அமைச்சால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறிய குழந்தைகளுடன் மின்வசதியின்றி வீடுகளில் வசிப்பது பாதுகாப்பற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்விடயத்தில் தலையிட்டு வர்த்தகக் கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் தீர்வைப் பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மின் இணைப்பு தொடர்பாக மன்னார் மின் இனைப்புக் காரியாலத்துடன் பலமறை தொடர்பு கொண்டும் எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தனக்கு அறியத்தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் தெரிவித்தள்ளார். அரச அலுவலகங்களுக்கு கிடைக்கும் கடிதங்களுக்கான பதில் 14 நாட்களுக்குள் அனுப்பப்படவேண்டும். இவ்விடயம் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வெண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

.(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலியில் மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு மின்னிணைப்பு எப்போது கிடைக்கும் Reviewed by NEWMANNAR on January 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.