அண்மைய செய்திகள்

recent
-

நகுலேஸ்வரன் கொலை வழக்கு- சந்தேக நபர்களில் 4 பேர் விடுதலை! கிராம அலுவலர் உட்பட மூவர் தொடர்ந்து விளக்கமறியலில்



தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல் துறையில் கடமையாற்றி பின் இலங்கை அரசிடம் புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவரின் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டவர்களில் ஏழு பேரில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிராம அலுவலகர் உட்பட மூவர் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த விடுதலைப்புலிகளின் காவல் துறையில் கடமையாற்றி பின் இலங்கை அரசிடம் புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் வாழ்ந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது-40) என்பவர் கடந்த 12.11.2014 அன்று இரவு 8.30 மணியளவில இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவ் சம்பவம் தொடர்பாக அப் பகுதியைச் சார்ந்த கிராம அலுவலகர் ஒருவர் உட்பட ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஐர் படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட நிலையில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர்.

இவ் வழக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை கிழமை (21.1.2015) மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இவ் ஏழு சந்தேக நபர்களையும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் நான்கு பேர் விசாரணை மூலம் நிரபராதியாக தென்படுவதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அந்நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் அப் பகுதி கிராம அலுவலகர் உட்பட ஏனைய மூவரும் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவுட்டதுடன் எதிர்வரும் 2.2.2015 அன்று நீதிமன்றில் ஆஐர்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் இம் மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே ஒரு கொலை குற்றம் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற போது இவர் தலைமறைவாகி இருந்ததுடன் வழக்கில் இவர் ஆஐராகாத நிலையில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இவ் சந்தேக நபர் இன்று (23.1.2015) வவுனியா மேல் நீதிமன்றில் ஆஜராக்குவதற்கான நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
நகுலேஸ்வரன் கொலை வழக்கு- சந்தேக நபர்களில் 4 பேர் விடுதலை! கிராம அலுவலர் உட்பட மூவர் தொடர்ந்து விளக்கமறியலில் Reviewed by NEWMANNAR on January 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.