அண்மைய செய்திகள்

recent
-

தமவிபு கட்சி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முற்சிப்பதாக ஜனா குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தமது இரண்டு உறுப்பினர்களுடன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கையானது அவர்களின் அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடு என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

முஸ்லிம் முதலமைச்சர் வருவதை விடுத்து தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைத்து அவர்கள் இந்த அறிக்கையினை வெளியிடவில்லை. இன்றைய சிக்கல் நிலையை மேலும் சிக்கல் நிலைக்கு கொண்டு செல்லும் வகையிலேயே இவ்வாறான அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் அந்த இரண்டு உறுப்பினர்களின் இரண்டு பேரின் ஆதரவை மட்டும் கொண்டு ஆட்சி அமைக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தமிழ் மக்களில் இருந்து அந்நியப்படுத்துவதற்கும் அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமவிபு கட்சி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முற்சிப்பதாக ஜனா குற்றச்சாட்டு Reviewed by NEWMANNAR on January 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.