அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சரவை நியமனம் பிற்போடப்பட்டுள்ளது? ஆட்சி அமைப்பதில் சிக்கல்!

இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை நியமனம் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. அமைச்சர்களது எண்ணிக்கை 25 இலிருந்து 40 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது ஏனெனில் மைத்திரி பக்கம் 98 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக்ச பக்கம் 118 பேர் உள்ளனர். இதனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சரவையும், பாராளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கு 115 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும்.

ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் ஐ.தே.கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜே.வி.பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரியுடன் வந்த உறுப்பினர்கள் என மொத்தமாக 98பேர் உள்ளனர்.

மீண்டும் மகிந்த ராஜபக்சவின் பக்கத்தில் இருக்கும்  18 பேரையாவது இந்தப் பக்கம் எடுக்க வேண்டும். அல்லது காபந்து அரசாங்கம் அமைச்சரவை அல்லது தேசிய அரசாங்கமே அமைக்க வேண்டி ஏற்படும்..

தொண்டமான், பிரபா கணேசன், வாசுதேவ, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டி.யு. குணசேகர, டிலான் பெரேரா, மற்றும் ஐ.தே.கட்சியில் இருந்து சென்றவர்கள் அதாவுல்லா, ஹிஸ்புல்லா, காதர் ஆகியோர் மற்றும் சிலருடன் சந்திரிக்கா, ராஜித்த பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர்.

ஆனால் இவ் அமைச்சு 100 நாட்களுக்கு மட்டுமே ஏப்ரல் 20ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது.

அத்துடன் பல்வேறு பொலிஸ், நீதி, தேர்தல், நிர்வாகம், இலஞ்ச ஆணைக்குழு கொண்ட கொமிசன்கள், அதிகாரமளிக்கப்பட்ட ஜனாதிபதி முறை, அரசியலமைப்பு மாற்றம் போன்ற பல்வேறு திட்டங்களை பாராளுமன்றத்தில் அமுல்படுத்த அரசுக்கு மூன்றில் இரண்டு அதாவது 160 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பலம் இருக்க வேண்டும்.

ஆனால் மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 25 அமைச்சர்களும் 25 பிரதியமைச்சர்களுமே உள்ளன, இதனை மீற முடியாது மேற்படி சில உறுபப்பினர்கள் மீள அமைச்சர் பொறுப்பை கொடுப்பதற்கு ஆகக் குறைந்தது 50-60 அமைச்சர் பதவிகளாவது இருக்க வேண்டும்.

தொண்டமான் இந்தியா சென்றுள்ளார். சில அமைச்சர்கள் ஏற்கனவே நிமல் சிறிபால டி சில்வா பிரதமராக்குவதற்கு 128 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

சபாநாயகர் கூட சமல் ராஜபக்ச எதிர்வரும் பாராளுமன்றம் 19ம் திகதி கூடும் போது எதிர்க்கட்சி ஆசனத்தில் பாராளுமன்றத்தில் கூடுதலாக உறுப்பினர்கள் இருந்தால் பாராளுமன்றத்தில் அரச பலம் குறைந்து காணப்படும்.

ஜே.வி.பியும் ஒருபோதும் அரசாங்கத் தரப்பில் இருக்காது. காரணம், ஐ.தே.கட்சி பிரதமர் தலைமையின் கீழ் அவர்கள் செயல்பட இணங்குவதில்லை. அவர்கள் தன்னிச்சையாக இயங்குவார்கள். அதேபோன்று அமைச்சர் பொறுப்பை எடுத்துக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் சேரமாட்டாது.

மைத்திரியுடன் செயல்பட்ட சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. அவருக்கு பதிலாக பதவியை பெற்றவர் மகிந்த பக்கம் உள்ளார்.

மனோ கனேசன் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. அசாத் சாலி பாராளுமன்ற உறுப்பினர் இல்லை.

ஆனால் முதலிலே அரசில் இருந்து 40 பேரை கொண்டு வருவதற்கு சந்திரிக்கா அம்மையார் பேசியிருந்தார்.

அவர்களது பெயர் விபரங்களை ஏற்கனவே ஐ.தே.கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மகிந்தவிடம் கையளித்ததால் அவர்கள் தேர்தலுக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
அமைச்சரவை நியமனம் பிற்போடப்பட்டுள்ளது? ஆட்சி அமைப்பதில் சிக்கல்! Reviewed by NEWMANNAR on January 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.