அண்மைய செய்திகள்

recent
-

நடை பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ்

வடக்கில் முதன் முதலாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் இணைந்து இந்த தேர்தலில் ஒரே நோக்கத்திற்கான ஜனாதிபதி ஒருவரை வெற்றிக் கொள்ள பணியாற்ற கிடைத்தமை குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் இந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக போட்டியிட்ட போதும் அந்த உணர்வுகளை கடந்து எமது சகோதரர் ஓருவர் களமிறங்கிய உணர்வே மேலீட்டுக்காணப்பட்டதாகவும் கூறினார்.

நடை பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அவர் இங்கு தகவலளிக்கையில் –

கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பீட்டு பார்க்கும் போது இந்த தேர்தல் மிகவும் மக்கள் அச்சமற்ற முறையில் மிகவும் அமைதியாக இடம் பெற்றது.தேர்தலின் பின்னரும் எவ்வித அசம்பாவிதங்களும் இடம் பெறவில்லை.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்காக நானாட்டான் பிரதேச மக்கள் முழுமையான பங்களிப்பினை நல்கினார்கள்.அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.


அதே வேளை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக செயற்படுகின்றமையால் எமது நானாட்டான் பிரதேச மக்களுக்கு எதை செய்ய வேண்டும் என்று நாம் எழுத்து  மூலமான கோறிக்கைகளை முன் வைக்கின்ற  போது அதனை எவ்வித பாகுபாடுகளுமின்றி பெற்றுத்தருவதற்கு உதவிகளை செய்துள்ளதை இந்த சந்தரப்பத்தில் நினைவுபடுத்துவதாகவும் நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ்  தெரிவித்துள்ளார்.

தமிழ்  தேசிய கூடுடமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அபிவிருத்திகளுக்கு அவர் ஏதும் அச்சுறுத்தல் செய்யும் வகையில் செயற்படுகின்றாரா என அவரிடம் கேட்ட போது –
அவ்வாறு ஒரு செயற்பாடு எனது பிரதேச சபைக்குள் இடம் பெற்றதாக இல்லை என்றும் கூறினார் தலைவர் அன்பு ராஜ் கூறினார்.

இர்ஷாத் றஹ்மத்துல்லா -
நடை பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் Reviewed by NEWMANNAR on January 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.