அண்மைய செய்திகள்

recent
-

இ.குமரேஸ் செய்தி தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் வெளியிட்டுள்ள அறிக்கை

இ.குமரேஸ் செய்தி தொடர்பாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் வெளியிட்டுள்ள அறிக்கைவன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து இம்மாவட்ட தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு அளப்பறிய பணிகளை ஆற்றியதுடன்,இந்த புதிய ஜனாதிபதியினை உருவாக்குவதில் முஸ்லிம் மக்களினதும்,தமிழ் மக்களினதும் வாக்குகளை பெற்றுக் கொடுப்பதில் தன்னையே தியாகம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,தற்போதைய புதிய  அரசில் ஏற்கனவே வகித்த கைத்தொழில் வணிகத் துறை அமைச்சராக பதவிப் பிரமானம் செய்துள்ள றிசாத் பதியுதீன் தொடர்பில் மன்னார் நகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இ.குமரேஸ் மன்னார் இணையத்தளத்துக்கு வழங்கியுள்ள செய்தி தொடர்பில் எமது வண்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன்,இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் செயலாளர் நாயகம்.மாவை சேனாதி ராஜா ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக மன்னார் நகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் நானும்,எமது ஆதரவாளர்களும் பெரும் கவலை அடைந்துள்ளதாகவும்,நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் பொறுப்பற்ற முறையில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் விளக்கமொன்றினையும் நகுசீன் வெளியிட்டுள்ளார்.
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இருந்து அமைச்சராக இருக்கும் றிசாத் பதியுதீன் அவர்கள் தொடர்பில் நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் வன்னி அமைச்சர் என்று சாடியிருப்பது நேரடியாக அது அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை புலனாகின்றது.

இன்று இந்த நாட்டில் நல்லாட்சி ஒன்றினை ஏற்படுத்த எற்கனவே மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் வகித்துவந்த அனைத்து பதவிகளையும் துறந்து சவால்களும்,அச்சுறுத்தல்களும் வந்த போதும்,இந் நாட்டு சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்களின் விமோசனத்திற்காகவும் ,பாதுகாப்புக்காகவும் அவற்றையெல்லாம் துாக்கி எரிந்துவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்கு மிகவும் உறுதுனையுடன பணியாற்றியவர் றிசாத் பதியுதீன் என்பதை யாவரும் நன்கறிவர்.
இந்த நிலையில் இந்த அரசாங்கத்தில் உடன்பாடடு அரசியல் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி வந்த தலைவர்களுள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் பிரதானமானவர் என்பதை இங்கு சுட்டிக்காட்டுவதுடன்,அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஜாதிக ஹெல உருமய உள்ளிட்ட இன்னும் எத்தனையோ அமைப்புக்கள் ஆதரவளித்து வருகின்ற போதும்,அவர்களுடன் முரண்பாட்டு அரசியைலை பற்றி சிந்திக்காமல் உடன்பாட்டு அரசியல் மூல் இலங்கை தேசத்தில் நல்லாட்சியினை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் அர்ப்பண சிந்தனையுடன் செயற்பட்ட ஒரு தலைவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை சிறுபான்மை தமிழ் பேசும் மக்களும் ஏன்,சிங்கள பெரும்பான்மை மக்களும் பார்க்கின்றதை இங்கு நாம் சுட்டிக்கட்ட வேண்டும்.
தேர்தல் காலத்திலும்,அதற்கு பின்னரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது தேர்தல் பணிகளை மிகவும் நேர்மையாக முன்னெடுத்துவந்தார்.இந்த நிலையில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அமைச்சரவையில் ஏற்கனவே றிசாத் பதியுதீன் வகித்த  அதே கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சை ஜனாதிபதியும்,பிரதமரும் ஓரு மித்த உடன்பாட்டுடன் வழங்கியிருப்பதன் காரணம் ,அவர் செயற்திறமை மிக்கவர் என்பதனால் ஆகும்.
இது இவ்வாறு இருக்க மன்னார் நகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான குமரேஸ் என்பவர் கடந்த காலங்களில் மேற்கொண்ட இன ரீதியிலான பிளவுகள் தொடர்பில் அதிகமான விமர்சனங்களுக்குள் இவர் உள்ளாகியிரந்த போதும்,அவற்றை மறந்து புதிய அரசியல் கலாசாரத்திற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டுவந்தோம்.

தேர்தல் முடிவடைந்து இன்னும் அதனது உஷ்னம் கூட மாறாத வேளை மீண்டும் நகர சபை உறுப்பினர் குமரேஷ் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் மோசமான விமர்சனங்களையும் உண்மைக்கு புறம்பான கட்டுக் கதைகளை தமிழ் மக்கள் கூறுகின்றார்கள் என்று புனைந்து வெளியிடுவதுடன்,மன்னார் மாவட்டத்தில் உள்ள  தமிழ் மக்களில் 75 சதவீதமானவர்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்ற ஒரு பிழையான தகவலை வெளியிடுவதன் மூலம் மீண்டும் மன்னார் மாவட்ட மக்களை முஸ்லிம்களின் எதிரிகளாக காண்பித்து அதன் மூலம் இவரது அரசியல் இருப்பை தக்க வைக்க முனையலாம் என நப்பாசைக் கொண்டுள்ளார்.
இவ்வாறு இன ரீதியான பிளவுகளால் இனியும் எமது மாவட்ட தமிழ்-முஸ்லிம் மக்கள்  பிரிவினைவாதத்துக்கு துணைபோக மாட்டார்கள் என்பதை தெளிவாக நகர சபை உறுப்பினர் குமரேஸ் அவர்களுக்கு தெரிவிக்க விரும்புவதுடன்,அப்பாவி தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து அதன் மூலம் வங்குரோத்து தனமான சின்னத்தனமான அரசியலை செய்ய முனைய வேண்டாம் என்று கௌரவமாக கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.
அதே போல் ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுகின்ற போது சரியான நம்பகத்தனமான முறையில் அவற்றை வழங்குமாறும்,யாரோ சொல்லிக் கொடுத்த புழுகு மூட்டைகளை சுமந்து வந்து அவப்பெயரை சம்பாதிக்கும் அசிங்கத்தனமான செயற்பாடுகள் ஆனது ஒட்டு மொத்த நகர சபையின் மக்கள் பிரதி நிதிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பெரும் அவமானமாகும் என தான் கருதுகின்றேன்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் அதிகப்படியான நம்பிக்கையினை பெற்ற ஒரு தேசிய கட்சியாகும்.இந்த வகையில் ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்து செயற்பட்ட குமரேஸ் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருக்கின்றாரா இல்லையா என்பது புறமிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இவ்வாறான பொறுப்பற்ற இன மோதல்களுக்கு துாபமிடும் அறிக்கைகள் தொடர்பில் தமது முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும் என்பதுடன்,நெறிப்படுத்தப்பட்ட அரசியல் கலாசாரத்தை பயிற்றுவிப்பதன் அவசியம் இந்த நாட்டின் நாங்களும்,நீங்களும் கேட்கும் நல்லாட்சிக்கு வழி ஏற்படுத்தும்.
மக்களை பிழையாக வழி நடத்திய இன முறுகலை மன்னார் மாவட்டத்தில் தோற்றுவிக்கும் வகையில் வெளியிடும் கருத்துக்களைால் மக்கள் கவையடைந்துள்ளதுடன்,அடுத்த நகர சபை தேர்தலில் இவர்களை மக்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவார்கள் என்பதை நாம் கடந்த கால அரசியல் வரலாற்றுப் பாடங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.எனறும் மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் தெரிவித்துள்ளார்.
இ.குமரேஸ் செய்தி தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் வெளியிட்டுள்ள அறிக்கை Reviewed by NEWMANNAR on January 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.