அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்கள், அரச , மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களின் தலைவர்கள் ,செயலாளர்கள் கலந்துசிறப்பிக்கும் விழிப்புணர்வு ஒன்றுகூடல் -

புலம்பெயர் ஒன்றியம் விடத்தல்தீவின் ( I U V ) அனுசரணையுடன் கிராம மட்டத்திலான சகலவிதமான துறைகளுக்குமான விழிப்புணர்வு ஒன்றுகூடலானது எதிர்வரும் மாசி மாதம் மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை (03 - 02 - 2015 ) காலை 10:00 மணியளவில் விடத்தல் தீவு புனித ஜோசெப்வாஸ் மகா வித்தியாலயத்தில்
நடைபெற இருப்பதனை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .
இவ் விழிப்புணர்வு ஒன்றுகூடல் நிகழ்வுக்கு எமது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் ,கெளரவ வினோ நோகராதலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பிப்பதுடன் ,வடமாகாண அமைச்சர் ,சட்டத்தரணி கெளரவ பா. டெனீஸ்வரன் அவர்களும் , மற்றும் ஏனைய வடமாகாண உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர் .
இன்னும் எமது பிரதேசம் சார் அரச , அரசசார்பற்ற ,தினைக்களங்களிளிருந்தும் அதிகாரிகள் ,திணைக்கள தலைவர்கள் போன்றோர் கலந்துகொள்ள உள்ளார்கள் . குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு .மாணிக்கவாசகம் சிறிஸ்கந்தராஜா அவர்களும் , மாந்தை மேற்கு பிரதேசசபை தலைவர் திரு சு. வரப்பிரகாசம் அவர்களும் மாந்தை மேற்கு பிரதேச சபை
செயலாளர் திரு ச. ஜெனிங்ஸ் அவர்களும் ,  கலந்து கொள்ள உள்ளனர்.
மற்றும் பிரதேச செயலாளர் திரு ம.பரமதாஸ் அவர்களும் இந்தியன் வீடமைப்பு திட்டத்தின் மன்னார் மாவட்ட பொறியியலாளர் திரு பெ.பெனற் அவர்களும் , இலங்கை வங்கியின் உத்தியோகத்தர் திரு ஐங்கரன் அவர்களும் ,மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் காணி அளவை அதிகாரி திரு அகிலன் , மற்றும் இறப்பு, பிறப்பு, திருமண பதிவுகாரர் திருமதி நிர்மலோஜினி பிரபாகரன் , மற்றும் கிராம அபிவிருத்ததி அதிகாரி திரு பிரான்சிஸ் றீகன் அவர்களும் ,மன்னார் மாவட்ட உதைபந்தாட்டசம்மேளன செயலாளர் திரு ஞானராஜ், அவர்களும் , யாழ் பல்கலைக்கழக ஆங்கில பாடநெறி சிரேஷ்ட விரிவுரையாளர் திரு ஞா .ஜெயசீலன் அவர்களும் வருகைதர உள்ளனர்.
அத்துடன் மன்னார் மாவட்ட இளைஞர் கழக இயக்குனர் திரு முனாப் அவர்களும் , நீர்பாசன திணைக்கள அதிகாரி திரு குணா அவர்களும் , மின்சார சபை அதிகாரி அவர்களும் ,வாழ்வுதய இயக்குனர் அவர்களும் ,பிரஜைகள் குழு இயக்குனர் அவர்களும் ,சட்ட ஆலோசனை வழங்குவதற்கு சட்டத்தரணி திரு . கயஸ் பெல்டானோ அவர்களும் விடத்தல்தீவு காவல்த்துறை அதிகாரியும் ,போக்குவரத்து காவல்த்துறை பிரிவு அதிகாரி அவர்களும் , புனித பற்றிமா மகா வித்தியாலயம் பேசாலையின் அதிபர் அருட்சகோதரர் j .ஸ்ரனிஸ்லொஸ் FSC அவர்களும் , மடு வலய கல்வி அதிகாரி அவர்களும் , எமது மன்/ தூய ஜோசெப்வாஸ் மகா வித்தியாலய அதிபர் அவர்களும் ,மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதிநிதி  அவர்களும்       கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மற்றும் மருத்துவ சிகிச்சை,மருத்துவ விளக்கங்களும் அளிக்கப்படவுள்ளதுடன் சிறப்பாக தோல் நோய் சம்பந்தமான விளக்கங்களும் சிகிச்சைகளும் வைத்திய கலாநிதி திருமதி நொறிஸ் மரியசெல்வம் அவர்களினால் வழங்கப்படவிருப்பதுடன்  பல் நோய்கள் சம்பந்தமான விளக்கங்களும் அவற்றுக்கான சிகிச்சையும்  எமது ஒன்றியத்தின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி ம .மதுரநாயகம் அவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளதையும் தங்களுக்கு அறியத்தருகின்றோம் .
மற்றும் எமது ஒன்றியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு பற்பசையும் வழங்கப்பட வுள்ளது .

தகவல்
Dr.ம.மதுரநாயகம்,
இணைப்பாளர்,
IUV.
மன்னார் மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்கள், அரச , மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களின் தலைவர்கள் ,செயலாளர்கள் கலந்துசிறப்பிக்கும் விழிப்புணர்வு ஒன்றுகூடல் - Reviewed by NEWMANNAR on January 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.