வாக்களித்த மக்களுக்கு எச்.எம்.ரயீஸின் நன்றிகள்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம்களின் அமோக ஆதரவினைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்த வேட்பாளருக்கு கட்சியின் தலைமையோடும், கட்சியோடும் பயணித்து வாக்களித்த அனைவருக்கும் மு.கா சார்பாகவும் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் எதிபார்த்தது போலவே நாட்டில் ஒரு அரசியல் மாற்றம் இடம்பெற்றிருக்கிறது. இதட்கு மு.கா வும் அதன் போராளிகளும் பாரிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். அமைதியான ஜனநாயகமான தேர்தல் நடந்து முடிந்திருக்கும் இத்தருணத்தில் எம் வெற்றிக் கொண்டாட்டங்கள் மிக நிதானமாக யாருக்கும் அசௌகரியங்களை ஏட்படுத்தும் வகையில் அமைந்து விடக்கூடாது.
தமிழ் பேசும் மக்களின் அமோக ஆதரவுடனும், எதிபார்ப்புடனும் ஜனாதிபதியாகி இருக்கும் அதிமேதகு மைத்திரிபால சிரிசேனா அவர்களுக்கு சிறுபான்மை மக்கள் சார்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவும்,வன்னி மக்கள் சார்பாகவும், வன்னி மாவட்ட மு.கா போராளிகள் சார்பாகவும் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டில் எந்த விதமான அச்சுறுத்தல்களுக்கும், அதிகாரத்துக்கும் அடிபணியாமல் நீதியானதும்,நேர்மையானதுமான தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தி, தேர்தல் காலத்தில் நாட்டில் சட்டம்,ஒழுங்கை நிலைநாட்டிய தேர்தல் ஆணையாளர் கௌரவ மகிந்த தேசப்பிரியா அவர்களுக்கும், அவர்களின் அதிகாரிகளுக்கும் மு.கா சார்பாகவும்,என் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...
எச்.எம்.ரயீஸ்.
வட மாகாண சபை உறுப்பினர்.
உயர்பீட உறுப்பினர். ( ஸ்ரீ.மு.கா. )
வாக்களித்த மக்களுக்கு எச்.எம்.ரயீஸின் நன்றிகள்.
Reviewed by NEWMANNAR
on
January 18, 2015
Rating:

No comments:
Post a Comment