அண்மைய செய்திகள்

recent
-

குட்டி ராஜபக்ச போல் செயற்பட்ட றிசாட் பதியுதீன் - சார்ள்ஸ் நிர்மலநாதன்

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஆட்சி மாற்றம் வேண்டி வன்னி மக்கள் வாக்களிக்க இருந்த வேளையில், கடந்த ஆட்சியில் வன்னியின் குட்டி ராஜபக்ஷ   போன்று செயற்பட்ட றிசாட் பதியுதீன், சர்வாதிகார அமைச்சராக அரசகாணி அபகரிப்பு மற்றும் தகுதியற்ற நியமனங்கள் வழங்கும் அமைச்சராக, தன்னுடைய அரசியலில் ஈடுபடாத அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அமைச்சராக செயற்பட்டவர். 

ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளரை ஆதரித்ததால் வன்னி மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த வேளையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொதுவேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டது. 

அப்போது ஆட்சியில் இருந்த முன்னைய அரசு தமிழ் மக்களை தேர்தலை புறக்கணிக்குமாறு பல முயற்சிகளை மேற்கொண்டு இருந்தபோதும்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க நாம் மக்கள் மத்தியில் சென்று நேரடியாக கேட்டுக்கொண்டதற்கு அமைவாக பொதுவேட்பாளரை ஆதரித்த வன்னி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். 
புதிதாக அமைந்த அரசை வாழ்த்தி நிற்பதோடு, எம்மக்கள் நல்லாட்சியை எதிர்பார்த்திருக்கின்றார்கள். கடந்த ஆட்சியில் மக்களுக்கு அட்டூழியங்கள் செய்த அமைச்சரை, இந்த ஆட்சியில் கட்சி தலைமையும் புதிய அரசும் இவரை கண்காணிக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்.

சார்ள்ஸ் நிர்மலநாதன்
 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு 
குட்டி ராஜபக்ச போல் செயற்பட்ட றிசாட் பதியுதீன் - சார்ள்ஸ் நிர்மலநாதன் Reviewed by NEWMANNAR on January 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.