அண்மைய செய்திகள்

recent
-

அன்னை வேளாங்கண்ணியில் களை கட்டிய புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிகழ்வுகள்! பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர் (Photos)

இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் உலகப்பிரசித்தம் பெற்றது. எல்லா சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து அன்னை மரியாளை வணங்கிச் செல்கின்றனர்.

வேளாங்கண்ணியில் இம்முறை புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

2015 ஆம் ஆண்டு பிறக்கும் நேரத்தில் மாதாவின் திருச்சொரூபம் மின்னொளியில் ஜொலித்தது.

ஏராளமானோர் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.

இவ்வளவு புகழ் பெற்ற மாதா திருக்கோவில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தவிர, சென்னை பெசன்ட் நகர், மதுரை அண்ணாநகர் போன்ற இடங்களிலும், இலங்கையின் கொழும்பு செக்கடித்தெருவிலும் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் அமைந்துள்ளமையை காணலாம்.



அன்னை வேளாங்கண்ணியில் களை கட்டிய புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிகழ்வுகள்! பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர் (Photos) Reviewed by NEWMANNAR on January 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.