அண்மைய செய்திகள்

recent
-

பரிசுத்த பாப்பரசரின் மடு விஜயத்தை முன்னிட்டு மடு திருத்தலத்திற்கு செல்லும் சகல பாதைகளும் புனரமைப்பு-பா.டெனிஸ்வரன். Photos

பரிசுத்த பாப்பரசரின் மடுத்திருத்தல வருகையை முன்னிட்டு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய பிரதான வீதிகள் அனைத்தும் துரித கதியில் புனரமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

பரிசுத்த பாப்பரசர் அவர்களின் மடுத் திருத்தள வருகையை முன்னிட்டு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய பிரதான வீதிகளான பிரமனாலங்குளம் - மடு வீதி, தட்சனா மருதமடு – மடு வீதி, பரப்புக்கடந்தான் - மடு வீதி , மடுச் சந்தி - மடு வீதி ஆகிய வீதிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 3 ஆம் திகதி(3-1-2015) அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த அபிவிருத்தி பணிகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில் இன்று(12) திங்கட்கிழமை காலை மடுத் திருத்தலத்துக்கு விஜயம் செய்த வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்; சகல வீதிப்புனரமைப்பு பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டதோடு, மிகுந்த ஊக்கத்தோடு உழைத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் தலைவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.  








பரிசுத்த பாப்பரசரின் மடு விஜயத்தை முன்னிட்டு மடு திருத்தலத்திற்கு செல்லும் சகல பாதைகளும் புனரமைப்பு-பா.டெனிஸ்வரன். Photos Reviewed by Admin on January 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.